Tuesday 4 February 2020


செ ய் தி க ள்

சம்பளப்பட்டுவாடா

விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்கள் மற்றும் விருப்பமில்லாமல் BSNLலில் பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரது மனதிலும் எழுகின்ற ஒரே கேள்வி “எப்போது சம்பளம்?” என்பதே.
 தற்போதைய நிலவரப்படி வங்கிக்கடன் கிடைத்தால் மட்டுமே சம்பளப்பட்டுவாடா நடைபெறும் என்று கூறப்படுகின்றது. 
இப்போதுதான் வங்கி வேலைநிறுத்தம் நடந்து முடிந்துள்ளது. 
ஏதேனும் ஒரு வங்கி மனது இரங்கி BSNL நிறுவனத்திற்கு கடன் கொடுத்தால் மட்டுமே சம்பளம் பட்டுவாடா ஆகும் நிலை உள்ளது. இன்றைய நிலவரப்படி வங்கிகளின் வராக்கடன் 10 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. இவை அனைத்தும் பெருமுதலாளிகளுக்கு வங்கியில் இருந்து கொடுக்கப்பட்ட கடனாகும். ஆனால் ஒரு பொதுத்துறையான BSNL நிறுவனத்திற்கு சுமார் 4000 கோடி கடன் கொடுக்க வங்கிகள் தயங்குவதும் DOT அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதும் மிகவும் வேதனைக்குரியது. 
விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு பிப்ரவரி 15 அன்று விடுப்புச்சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பளமாவது பிப்ரவரி 15க்குள் கிடைக்குமா?
 என்ற MILLION DOLLAR கேள்வி எழுந்துள்ளது.
 ------------------------------------
AUAB - அனைத்து சங்க கூட்டமைப்பு

AUAB எனப்படும் அனைத்து சங்க கூட்டமைப்பு 06/02/2020 அன்று டெல்லியில் கூடுகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பளங்கள் பட்டுவாடா ஆகாதது குறித்தும், விருப்ப ஓய்விற்குப் பிந்தைய நிலை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். விருப்ப ஓய்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து உறக்கநிலையில் இருந்த 
AUAB இப்போதுதான் விழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  ------------------------------------
சிறப்பு சிறுவிடுப்பு – SPECIAL CASUAL LEAVE


ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் அமைப்புகளுக்கு வழங்கப்படும் SPECIAL CASUAL LEAVE எனப்படும் சிறப்பு சிறுவிடுப்பு பற்றிய வழிகாட்டுதலை CORPORATE அலுவலகம் வெளியிட்டுள்ளது. அலுவலகங்களில் சிறப்பு சிறுவிடுப்பு பற்றிய குறிப்பேடுகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்றும் அதனால் சங்கங்களுக்கு சாதகம் கிடைப்பதாகவும் CORPORATE அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. சங்கங்கள் தங்களது மாவட்ட மாநாடுகள் மற்றும் செயற்குழுக்களை கூடியமட்டும் ஞாயிறு அல்லது விடுமுறை தினங்களிலும், மற்ற நாட்களாக இருந்தால் மாலை நேரங்களிலும் நடத்துமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. போகிற போக்கில் சிறப்பு சிறுவிடுப்பு 
SPECIAL CASUAL LEAVE இனிமேல் யாருக்கும் கிடையாது 
என நிர்வாகம் உத்திரவிட்டாலும் ஆச்சரியமில்லை.
 ------------------------------------
வங்கிக்கடன் மற்றும் சொசைட்டிக் கடன்

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு நவம்பர் 2019 வரை வங்கிக்கடன் கட்டப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு ஏப்ரல் 2019 வரை பிடித்தம் செய்யப்பட்ட கடன் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விருப்ப ஓய்வில் சென்ற தோழர்கள்
07/02/2020க்குள் சம்பந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து NO DUES சான்றிதழ் பெறவேண்டும் என நிர்வாகம் உத்திரவிட்டிருந்தது. 
ஜனவரி 2020 வரை நிலுவைத்தொகை செலுத்தப்படாததால் 29/02/2020க்குள் NO DUES சான்றிதழ் அளிப்பதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் 15/02/2020 அன்று விடுப்புச்சம்பளம் எவ்வாறு பட்டுவாடா நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.  வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறாத ஊழியர்களுக்கு மட்டும் விடுப்புச்சம்பளப் பட்டுவாடா நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
 ------------------------------------
EX GRATIAபட்ஜெட் ஒதுக்கீடு

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை வழங்கிட ரூ.13382/= கோடியும், விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களுக்கு EX GRATIA வழங்கிட ரூ.9889/= கோடியும் வரும் 2020-2021ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  விருப்ப ஓய்வு இதர செலவுகளுக்காக இந்த நிதியாண்டிற்கு ரூ.528/= கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நிர்வாகச்செலவுகளுக்கானது. 

ஆனால் 2019-2020 இந்த நிதியாண்டிற்கான REVISED ESTIMATEல் 
EX GRATIA நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் அரசு அறிவித்தபடி 31/03/2020 அன்று முதல் தவணை EX GRATIA எவ்வாறு வழங்கிட முடியும் என்ற கேள்வி எழுகின்றது. நடைமுறைகளின்படி SUPPLEMENTARY DEMANDS FOR GRANTS பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு சமர்ப்பிக்கப்படுவதில்லை. விருப்ப ஓய்வில் சென்ற BSNL ஊழியர்களுக்கு முதல்தவணை EX-GRATIAவை சிறப்பு நிதி என்ற வகையில் அரசு ஒதுக்கீடு செய்தால் மட்டுமே பட்டுவாடா சொன்ன தேதியில் நடைபெறும். தற்போதைய நிலைமையில் எதையும் உறுதியாக சொல்ல இயலவில்லை.  இப்போது நடைபெறும் ஆட்சியில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்ற சூழல்தான் நிலவுகிறது. தோழர்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்கவும்.

1 comment: