Tuesday, 29 September 2020

 உண்ணாவிரதம்

AUAB

அனைத்து சங்க கூட்டமைப்பு

காரைக்குடி

----------------------------------------------

BSNLக்கு 4G வழங்கக்கோரி

நாடு தழுவிய

உண்ணாவிரதம்

 01/10/2020  வியாழன் – காலை 10 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

 ஆர்ப்பாட்டம்

  • தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
  • தொலைபேசி நிலையம் – பரமக்குடி
  • தொலைபேசி நிலையம் – சிவகங்கை

 ஒப்பந்த ஊழியர்கள்....

ஓய்வு பெற்ற ஊழியர்கள்...

பணியில் உள்ள  ஊழியர்கள்...

அவசியம் கலந்து கொள்ளவும்.

Monday, 28 September 2020

 அக்டோபர் -2

அண்ணல் காந்தி பிறந்த தின விழா...

N F T E

தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

மதுரை வணிகப்பகுதி

--------------------------------------------

அக்டோபர் -2

அண்ணல் காந்தி பிறந்த தின விழா...

 -----------------------------------------

மதுரை – காரைக்குடி –விருதுநகர்

இணைந்த

மாவட்டச்செயற்குழு

 --------------------------------------------

02/10/2020  - வெள்ளி – காலை 10 மணி

தல்லாகுளம் தொலைபேசி நிலையம் -  மதுரை

 தோழர்களே... வாரீர்...

 அக்டோபர் -1

நாடு தழுவிய கறுப்பு தினம்...

 01/10/2020 – BSNLன் பிறந்த நாளில்..

  •  BSNL நிறுவனத்திற்கு உடனடியாக 4G வழங்கக்கோரி...
  • 4G குத்தகை முட்டுக்கட்டைகளை அகற்றக்கோரி...
  • BSNL புத்தாக்கத்திட்டத்தில் அறிவித்ததை அமுலாக்கக் கோரி...

 நாடு தழுவிய...

உண்ணாவிரதம்

கண்டன ஆர்ப்பாட்டம்

கறுப்பு அட்டை அணிதல்

     தோழர்களே... அணி திரள்வீர்...

Friday, 25 September 2020

 சங்கம் சேருதல் புது நடைமுறை

BSNL ஊழியர்கள் சங்கம் சேருவதற்கான பழைய நடைமுறையை மாற்றி அமைக்க நிர்வாகம் உத்தேசித்துள்ளது. 

தற்போதுள்ள நடைமுறைப்படி... 
  • அதற்கான படிவத்தில் ஆண்டுக்கு ஒருமுறை கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடமும் புதிதாக சேரவிருக்கும் சங்கப்பொறுப்பாளர்களிடமும் கையெழுத்து வாங்கி கணக்கு அதிகாரியிடம் சேர்க்க வேண்டும். 
  • அதற்குப் பதிலாக ஊழியர்கள் தங்களது ERP- ESS இணையம் வழியாக ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரு மாதத்தில் சங்கம் சேருவதற்கான தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம். 
  • கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் சங்கப்பொறுப்பாளர்களின் கையெழுத்து தேவையில்லை. 
  • முதன்முறையாக சங்கம்  சேருபவர்கள் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.குறிப்பிட்ட மாதம் வரை காத்திருக்கத் தேவையில்லை. 
  • ஒவ்வொரு மாதமும் சங்கப்பொறுப்பாளர்களுக்கு EMAIL மூலமாக அவர்களது சங்க உறுப்பினர்கள் விவரமும் சந்தாப்பிடித்த விவரமும் தெரியப்படுத்தப்படும்.
இது சம்பந்தமாக அனைத்து சங்கங்களிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதம் 24/09/2020 அன்று வெளியாகியுள்ளது. சங்கங்களின்  கருத்துக்கள் 08/10/2020க்குள் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகள் டெல்லித் தலைமையிடத்தில் பணிச்சுமை குறைவாக இருப்பதையேக் காட்டுகிறது.

                     நில்லாமல் பாடிய நிலா..                           

S.P.BALASUBRAMANIAM.,

ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம்

               

40 ஆண்டு காலம்...

40 ஆயிரம் பாடல்கள்...

15 ஆயிரம் கன்னடம்..

11 ஆயிரம் தமிழ்..

10 ஆயிரம் தெலுங்கு..

4 ஆயிரம் இந்தி மற்றும் இதர 12 மொழிகள்...

 

ஒரே நாடு... ஒரே மொழி....

என்ற விஷவிதை விதைக்கப்படும் 

இந்நாளில்... இந்நாட்டில்

என் இசைக்கு மொழியில்லை...

இனமில்லை.. நிறமில்லை... எல்லையில்லை...

என்று ஆயிரம் நிலவில் ஆரம்பித்து...

நில்லாமல் பாடிய நிறமில்லாத நிலா...

S.P. பாலசுப்பிரமணியன் மறைவிற்கு...

இதயம் கனத்த அஞ்சலி...

Thursday, 24 September 2020

கிளைக்கூட்டம்

தொலைபேசி ஊழியர்கள் சங்கம்

சிவகங்கை வருவாய் மாவட்டக்கிளை

காரைக்குடி

பொதுக்குழுக்கூட்டம்

26/09/2020 – சனிக்கிழமை – மாலை 05 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி.

----------------------------------------------

:தலைமை : 

தோழர். பா. முருகன் – கிளைச்செயலர் - சிவகங்கை

:ஆய்படு பொருள்:

தோழியர் கார்த்திகா விருப்ப மாற்றல் – வழியனுப்பு விழா

கிளை மாநாடு

தலமட்டப்பிரச்சினைகள்

ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்

ஒப்பந்த ஊழியர் அமைப்பு உருவாக்கம்

எழுப்பப்படும் ஏனைய பிரச்சினைகள்

:பங்கேற்பு :

தோழர். பழ.இராமச்சந்திரன் – AITUC

தோழர். வெ.மாரி -  மாவட்டச்செயலர்

தோழர். பா. லால்பகதூர் – மாவட்டத்தலைவர்

தோழியர் லெ.கார்த்திகா – NFTE மாநில மகளிரணி

தோழர்.நா. ஜெகன் – JCM உறுப்பினர்

தோழர்களே... வாரீர்...

அன்புடன் அழைக்கும்....

மா. ஆரோக்கியதாஸ் 

கிளைச்செயலர் – காரைக்குடி.

Monday, 21 September 2020

 எதிர்ப்பு நாள்

முதலாளிகளுக்கு வணக்கம் செய்யும்...

தொழிலாளிகளுக்கு வஞ்சனை செய்யும்...

மத்திய அரசைக் கண்டித்து...

செப்டம்பர் 23

அனைத்து தொழிற்சங்கங்களின்

நாடு தழுவிய எதிர்ப்பு நாள்

 

மத்திய அரசே...

தொழிலாளர் வாழ்வை முடக்காதே...

தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்காதே...

பொதுத்துறைகளை அழிக்காதே...

தேசத்தை நாசம் செய்யாதே...

 ----------------------------------------------------------------

23/09/2020 – புதன்கிழமை – காலை 10 மணி

தலைமை தபால் நிலையம் – மதுரை

ஐந்து விளக்கு – காரைக்குடி

அரண்மனை வாயில் – இராமநாதபுரம்

அரண்மனை வாயில் – சிவகங்கை

சந்தைப்பேட்டை – பரமக்குடி

----------------------------------------------------------------

தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்....

 JCM – தேசியக்குழுக்கூட்டம்

           JCM – தேசியக்குழுக்கூட்டம் 07/10/2020 அன்று டெல்லியில் நடைபெறும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. BSNLலில் உறுப்பினர் சரி பார்ப்புத்தேர்தல் நடந்து முடிந்து சரியாக ஓராண்டு காலம் முடிந்து விட்டது. 19/09/2019 முதல் 18/09/2022 வரையிலான மூன்றாண்டு கால அங்கீகார காலத்தில் ஓராண்டு காலம் JCM நடத்தப்படாமலே முடிந்து விட்டது.   JCM மாநிலக்குழு மற்றும் மாவட்டக்குழுக்களை நடத்துவதற்குள் மொத்த அங்கீகார காலமே முடிந்து போனாலும் போய்விடும். BSNL நிர்வாகம் தொழிற்சங்கங்களை நடத்தும் லட்சணத்தை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

          தமிழகத்தில் இருந்து மாநிலச்செயலர் தோழர்.நடராஜன் JCM தேசியக்குழு உறுப்பினராகக் கலந்து கொள்வார்.

Friday, 18 September 2020

 விருப்ப ஓய்வும் விடுபட்ட ஓய்வூதியர்களும்

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களில்  நாடுமுழுவதும் 671 ஊழியர்களின் ஓய்வூதியம் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 64 ஊழியர்களின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஊழியர்களின் பிரச்சினைகளை சரி செய்திட அனைத்து மாநில நிர்வாகங்களுக்கும் டெல்லி தலைமையகம் இன்று 18/09/2020 உத்திரவிட்டுள்ளது.

Monday, 14 September 2020


செப்டம்பர் – 23 
சினம் கொள் தோழா...
 
45 ஆண்டுகளில் நாடு காணாத அளவு...

வேலை இழப்பு... 
வேலை இல்லாத் திண்டாட்டங்கள்...

இளைஞர்கள்... பெண்கள்... 
வாழ்வாதாரம் இழந்த பயங்கரங்கள்...

அதிகம் படித்தவர்கள் 
அடிமட்ட வேலைக்கு படையெடுக்கும் கொடுமைகள்...

சாப்ட்வேர் படித்தவர்கள் 
சாக்கடை அள்ளும் வேலைக்குப் போகும் நிலைமைகள்...

வறுமையின் கொடுமையால் 
நாளும் பெருகும் தற்கொலை அவலங்கள்...

நாட்டின் பெருமிதங்களான 
பொதுத்துறைகள் ஒழிக்கப்படும் அநியாயங்கள்....

உலகின் மாபெரும் இந்திய ரயில்வே
தனியாருக்குத் தாரைபோகும் கேவலங்கள்...

வங்கிகள் இணைப்பு என்ற வகையற்ற செயலால்... 
நாளும் பெருகும் நாசங்கள்...

தேசத்தின் சொத்தாம் 
ஆயுள் காப்பீட்டை அழிக்க முனையும் மடமைகள்...

எண்ணெய் நிறுவனங்களை 
எரித்துப் புகையாக்கும் கொடூரங்கள்...

மக்களைப் பாதுகாக்கும் 
பாதுகாப்புத்துறைக்கே பாதுகாப்பு இல்லாத அலங்கோலங்கள்...

இந்திய நாட்டின் 
GDP 23.9 சதம் பின்னுக்குப் போன துயரங்கள்..

ஆனால் அம்பானி மட்டும் 
35 சதம் கூடுதல் சொத்து குவித்த அவமானங்கள்...

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?
இந்திய மக்களை?
இந்திய தொழிலாளர்களை?

பொறுத்தது போதும்... 
பொங்கி விடு தோழா...
செப்டம்பர் 23ல்...
கோஷம் முழங்கட்டும்...
தேசம் குலுங்கட்டும்....

Sunday, 13 September 2020


 ஓய்வூதியர்கள் உயிர்ச்சான்றிதழ்
LIFE CERTIFICATE FOR PENSIONERS

மத்திய அரசு ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 
தாங்கள் உயிருடன் இருப்பதற்கான வாழ்வுச்சான்றிதழ் அளிக்க வேண்டும். உலகம் தழுவிய கொரோனா தாக்கத்தால் இந்த ஆண்டு உயிர்ச்சான்றிதழ் அளிப்பதற்கான
திருத்தப்பட்ட நடைமுறைகளை ஓய்வூதியர்கள் இலாக்கா 
11/09/2020 அன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி...
மத்திய அரசு ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்வுச்சான்றிதழை 
01/11/2020 முதல் 31/12/2020 வரை சம்பந்தப்பட்ட வங்கி/தபால் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.

80 வயதிற்கு மேற்பட்ட மிகமூத்த குடிமக்கள் 
தங்கள் வாழ்வுச்சான்றிதழை 01/10/2020 முதல் 31/12/2020 வரை 
சம்பந்தப்பட்ட வங்கி/தபால் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.

RBI எனப்படும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி 
ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரோடு
V-CIP VIDEO BASED CUSTOMER IDENTIFICATION PROCESS எனப்படும்  
காணொளிக்காட்சி மூலம் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ளலாம்
வங்கிகளுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஏனைய ஓய்வூதியர்கள் CSC - COMMON SERVICE CENTRES எனப்படும் சேவைமையங்கள் மூலமாக தங்களது ஓய்வூதிய வாழ்வுச்சான்றிதழை சமர்ப்பிக்கலாம்

பிப்ரவரி 2019 முதல் BSNL நிறுவனத்தில் ஓய்வு பெற்றவர்கள் 
SAMPANN எனப்படும் DOTயின் ஓய்வூதிய மென்பொருள் மூலமாக ஓய்வூதியம் பெறுவதால் வங்கிகளுக்கு செல்ல வேண்டியதில்லை. மின்னணு முறையில் வாழ்வுச்சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். தாங்கள் ஓய்வு பெற்ற ஓராண்டு கழித்து
வாழ்வுச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்வுச்சான்றிதழைச் சம்பந்தப்பட்ட 
ஓய்வூதிய கணக்கு அதிகாரியிடம் நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம்.

Saturday, 12 September 2020


 கறுப்பு தினம்

BSNL...
அக்டோபர் 2000ல் BJP வாஜ்பாய் அரசால்
ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் பொதுத்துறை...
ஆண்டுகள் 20 ஆன நிலையில்...
அதே BJP மோடி அரசால் அழிக்கப்படும் அவலம்....

2016ல் ஆரம்பிக்கப்பட்ட அம்பானி நிறுவனத்துக்கு
4G வழங்கி.. 5Gயும் வழங்கத்துடிக்கும் அரசாங்கம்...
ஆண்டாண்டு காலமாக மக்கள் சேவை செய்யும்
அரசுத்துறை நிறுவனத்தை அழிக்கத்துடிக்கும் அநியாயம்...

உள்நாட்டில் 4G கருவிகள் உற்பத்தி செய்யும்
நிறுவனங்கள் இல்லாத நிலையில்
வெளிநாட்டு நிறுவனங்களிடம் கருவிகள் வாங்க
BSNL நிறுவனத்திற்கு அரசே தடை போடும் கொடுமை...

அனைத்து தனியார் நிறுவனங்களும்
அயல்நாட்டு கருவிகளைப் பயன்படுத்தும்போது...
அரசுத்துறையான BSNL  மட்டும்
உள்நாட்டுக் கருவிகளை வாங்கி
உருப்படாமல் போக வேண்டுமா?

கண்களைப் பிடுங்கி ஓவியப்போட்டியா?
கைகளை உடைத்து கிரிக்கெட் போட்டியா?
கால்களை உடைத்து கால்பந்து போட்டியா?

இந்நிலை மாற்றிட...
அரசின் பாரபட்சக் கொள்கைகளை
மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிட...
அக்டோபர் 1 BSNL உருவாக்க தினத்தை...
கறுப்பு தினமாகக் கடைப்பிடிப்போம்...

பொதுத்துறை உருவாக்க தினம் கறுப்பல்ல...
பொதுத்துறைகளை உருப்பட விடாமல் செய்யும்..
பொறுப்பற்ற அரசின் அணுகுமுறைக்கு எதிராகவே
அனைத்து சங்க கூட்டமைப்பின் கறுப்புதினம்...

தோழர்களே... உணர்வு கொள்வீர்...
BSNL காத்திட.. ஒற்றுமை காப்பீர்...

Thursday, 10 September 2020


AUAB - அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவுகள்

07/096/2020 அன்று காணொளிக்காட்சி மூலம் 
AUAB - அனைத்து சங்க கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. 
NFTE பொதுச்செயலர் தோழர். சந்தேஷ்வர்சிங் தலைமை வகித்தார். 
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

4G குத்தகையை ரத்து செய்ததின் மூலம் BSNL நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இந்திய அரசுக்கு BSNL நிறுவனத்திற்கு 4G சேவை வழங்க விருப்பம் இல்லை என்பதை இது தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எனவே BSNL நிறுவனத்திற்கு வழங்காததைக் கண்டித்து BSNL உருவாக்கதினமான அக்டோபர் 1ம் தேதி கருப்பு அட்டை அணிந்து கறுப்பு தினமாக கடைப்பிடிக்கவும், 
அன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கவும்,  ஆர்ப்பாட்டங்கள் நடத்திடவும் AUAB அறைகூவல் விடுக்கின்றது.

அக்டோபர் மாதம் முழுமையும் வாடிக்கையாளர் மகிழ்விப்பு மாதமாகக் கடைப்பிடிக்க ஊழியர்களை AUAB கேட்டுக்கொள்கின்றது.

தொலைபேசி பராமரிப்புப் பணிகள் OUTSOURCING என்னும் உருப்படாத நிலைக்குத் தள்ளப்பட்டு நமது சேவை முற்றிலுமாக சீரழிந்து வருகிறது. எனவே இந்த அபாய நிலைமையை CMDக்கு விரிவாக எடுத்துரைத்து... விரைந்து  BSNLஐக் காத்திட வேண்டுகோள் விடுப்பது.

AUABயில் அங்கம் வகிக்காத அமைப்புக்கள் ஒற்றுமை கருதி 
AUABயில் இணைந்திட வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

ஒரு சில இடங்களில் AUABயில் ஒற்றுமை இல்லாத நிலைமை இருக்கின்றது. இது சரிசெய்யப்பட வேண்டும். இன்றைய சூழலைக் கணக்கில் கொண்டு அனைத்து சங்க கூட்டமைப்பில் தொடர்ந்து பணியாற்ற அனைத்து சங்கங்களும் முயற்சி எடுக்க வேண்டும்.

Tuesday, 8 September 2020


செ ய் தி க ள்

ஒரிசா மாநிலச்செயலர் மறைவு

ஒரிசா NFTE மாநிலச்செயலர் தோழர். K.M.திரிபாதி
இன்று 08/09/2020 உடல்நலக்குறைவால் காலமானார். 
முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக மாநிலச்சங்கத்தை 
திறம்பட வழிநடத்தினார். நமது அஞ்சலி உரித்தாகுக.
 ----------------------------------------------
அக்டோபர் IDA விலைவாசிப்படி

நடப்புக் காலாண்டில் 01/07/2020 முதல் IDA 0.8 சதம் குறைந்தது. 
ஆனால் வரும் காலாண்டில் 01/10/2020 முதல் 5 சதம் உயர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அக்டோபர் மாத IDA ஜூன்,ஜூலை மற்றும் ஆகஸ்ட்  மாத விலைவாசி உயர்வை வைத்துக் கணக்கிடப்படுகிறது. ஜூன்,ஜூலை  மாதங்களில் விலைவாசிப்புள்ளிகள் உயர்ந்துள்ளன.  ஆகஸ்ட மாதம் விலைவாசிப்புள்ளிகள் உயராவிட்டாலும் கூட நிச்சயம் IDA உயர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
 ----------------------------------------------
உரிய நேரத்தில் ஓய்வூதியப்பட்டுவாடா

சம்பளப்பட்டுவாடா மாதந்தோறும் தடுமாறினாலும் ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் தாமதமின்றிப் பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. அந்த ஓய்வூதியமும் தற்போது தடுமாற ஆரம்பித்துள்ளது. மாதக்கடைசியில் பல தோழர்களுக்கு ஓய்வூதியம் பட்டுவாடா  ஆவதில்லை. ஒரு சில நாட்கள் கழித்தே பட்டுவாடா செய்யப்படுகின்றது. இது தவறு என்றும் ஓய்வூதியம் அந்த மாதக்கடைசி நாளில் கட்டாயம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என DOT தனது மாநில அலுவலகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 20ந்தேதி அதற்கான பணிகள் துவக்கப்பட்டு 24ந்தேதிக்குள் முடிக்கப்பட்டு மாதக்கடைசியில் ஓய்வூதியப் பட்டுவாடா உறுதி செய்யப்பட வேண்டும் என DOT உத்திரவிட்டுள்ளது.
 ----------------------------------------------
CROP – 2020 Comprehension Renting-Out Policy

BSNL காலி இடங்களையும், பயன்பாடு இல்லாத ஊழியர் குடியிருப்புக்களையும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கான கொள்கை அறிவிப்பை BSNL நிறுவனம் வெளியிட்டுள்ளது. 50 பக்க அளவில் விரிவான முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் குடியிருப்புக்களில் தற்போது குடியிருப்போருக்கு இந்த உத்திரவு பொருந்தாது.

Thursday, 3 September 2020


தொடரும் துயரங்கள்....
 

காரைக்குடி மாவட்ட முன்னணித் தொழிற்சங்கத்தலைவர்...
ஒன்றுபட்ட NFTE இயக்கத்தின்  போஸ் அணித்தலைவர்....
SNEA சங்கத்தின் உறுதிமிக்கத் தலைவர்...
AIBDPA ஓய்வூதியர் சங்கத்தின் காரைக்குடி மாவட்டச்செயலர்...
அருமைத்தோழர். 
M. இராதாகிருஷ்ணன் அவர்கள்
இன்று 03/09/2020 இயற்கை எய்தினார்.
சிறந்த பேச்சாளர்... மனிதப்பண்பாளர்...
மாற்றுக்கருத்துடையோரையும் மதித்த மாண்பாளர்...
கண்ணா என்று அனைவரையும் அழைக்கும் அன்பாளர்...
அனைத்து இயக்கங்களிலும் அழைப்பு இல்லாநிலையிலும்...
உணர்வோடு பங்கு கொண்டு கருத்துக்களை எடுத்துரைத்தவர்...
அவரது மறைவு காரைக்குடி தொழிற்சங்க இயக்கங்களுக்கு பேரிழப்பு...
அவரது தோழமைக்கும்... தொழிற்சங்க தொண்டிற்கும்...
நமது சிரம் தாழ்த்திய அஞ்சலி உரித்தாகுக...