செப்டம்பர் – 23
சினம் கொள் தோழா...
45 ஆண்டுகளில் நாடு காணாத அளவு...
வேலை இழப்பு...
வேலை இல்லாத் திண்டாட்டங்கள்...
இளைஞர்கள்... பெண்கள்...
வாழ்வாதாரம்
இழந்த பயங்கரங்கள்...
அதிகம் படித்தவர்கள்
அடிமட்ட வேலைக்கு
படையெடுக்கும் கொடுமைகள்...
சாப்ட்வேர் படித்தவர்கள்
சாக்கடை
அள்ளும் வேலைக்குப் போகும் நிலைமைகள்...
வறுமையின் கொடுமையால்
நாளும் பெருகும்
தற்கொலை அவலங்கள்...
நாட்டின் பெருமிதங்களான
பொதுத்துறைகள்
ஒழிக்கப்படும் அநியாயங்கள்....
உலகின் மாபெரும் இந்திய ரயில்வே
தனியாருக்குத் தாரைபோகும் கேவலங்கள்...
வங்கிகள் இணைப்பு என்ற வகையற்ற செயலால்...
நாளும் பெருகும் நாசங்கள்...
தேசத்தின் சொத்தாம்
ஆயுள் காப்பீட்டை
அழிக்க முனையும் மடமைகள்...
எண்ணெய் நிறுவனங்களை
எரித்துப்
புகையாக்கும் கொடூரங்கள்...
மக்களைப் பாதுகாக்கும்
பாதுகாப்புத்துறைக்கே
பாதுகாப்பு இல்லாத அலங்கோலங்கள்...
இந்திய நாட்டின்
GDP 23.9 சதம்
பின்னுக்குப் போன துயரங்கள்..
ஆனால் அம்பானி மட்டும்
35 சதம்
கூடுதல் சொத்து குவித்த அவமானங்கள்...
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?
இந்திய மக்களை?
இந்திய தொழிலாளர்களை?
பொறுத்தது போதும்...
பொங்கி விடு
தோழா...
செப்டம்பர் 23ல்...
கோஷம் முழங்கட்டும்...
தேசம் குலுங்கட்டும்....
No comments:
Post a Comment