AUAB - அனைத்து
சங்க கூட்டமைப்பு முடிவுகள்
07/096/2020
அன்று காணொளிக்காட்சி மூலம்
AUAB - அனைத்து சங்க கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.
NFTE பொதுச்செயலர் தோழர். சந்தேஷ்வர்சிங் தலைமை வகித்தார்.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
4G குத்தகையை
ரத்து செய்ததின் மூலம் BSNL நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
இந்திய அரசுக்கு BSNL நிறுவனத்திற்கு 4G சேவை வழங்க விருப்பம் இல்லை என்பதை இது தெளிவாகப்
படம்பிடித்துக் காட்டுகிறது. எனவே BSNL நிறுவனத்திற்கு வழங்காததைக் கண்டித்து BSNL
உருவாக்கதினமான அக்டோபர் 1ம் தேதி கருப்பு அட்டை அணிந்து கறுப்பு தினமாக கடைப்பிடிக்கவும்,
அன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கவும், ஆர்ப்பாட்டங்கள்
நடத்திடவும் AUAB அறைகூவல் விடுக்கின்றது.
அக்டோபர்
மாதம் முழுமையும் வாடிக்கையாளர் மகிழ்விப்பு மாதமாகக் கடைப்பிடிக்க ஊழியர்களை AUAB
கேட்டுக்கொள்கின்றது.
தொலைபேசி
பராமரிப்புப் பணிகள் OUTSOURCING என்னும் உருப்படாத நிலைக்குத் தள்ளப்பட்டு நமது சேவை
முற்றிலுமாக சீரழிந்து வருகிறது. எனவே இந்த அபாய நிலைமையை CMDக்கு விரிவாக எடுத்துரைத்து...
விரைந்து BSNLஐக் காத்திட வேண்டுகோள் விடுப்பது.
AUABயில் அங்கம் வகிக்காத அமைப்புக்கள் ஒற்றுமை கருதி
AUABயில் இணைந்திட வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
ஒரு சில இடங்களில்
AUABயில் ஒற்றுமை இல்லாத நிலைமை இருக்கின்றது. இது சரிசெய்யப்பட வேண்டும். இன்றைய சூழலைக்
கணக்கில் கொண்டு அனைத்து சங்க கூட்டமைப்பில் தொடர்ந்து பணியாற்ற அனைத்து சங்கங்களும்
முயற்சி எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment