Sunday, 13 September 2020


 ஓய்வூதியர்கள் உயிர்ச்சான்றிதழ்
LIFE CERTIFICATE FOR PENSIONERS

மத்திய அரசு ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 
தாங்கள் உயிருடன் இருப்பதற்கான வாழ்வுச்சான்றிதழ் அளிக்க வேண்டும். உலகம் தழுவிய கொரோனா தாக்கத்தால் இந்த ஆண்டு உயிர்ச்சான்றிதழ் அளிப்பதற்கான
திருத்தப்பட்ட நடைமுறைகளை ஓய்வூதியர்கள் இலாக்கா 
11/09/2020 அன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி...
மத்திய அரசு ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்வுச்சான்றிதழை 
01/11/2020 முதல் 31/12/2020 வரை சம்பந்தப்பட்ட வங்கி/தபால் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.

80 வயதிற்கு மேற்பட்ட மிகமூத்த குடிமக்கள் 
தங்கள் வாழ்வுச்சான்றிதழை 01/10/2020 முதல் 31/12/2020 வரை 
சம்பந்தப்பட்ட வங்கி/தபால் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.

RBI எனப்படும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி 
ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரோடு
V-CIP VIDEO BASED CUSTOMER IDENTIFICATION PROCESS எனப்படும்  
காணொளிக்காட்சி மூலம் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ளலாம்
வங்கிகளுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஏனைய ஓய்வூதியர்கள் CSC - COMMON SERVICE CENTRES எனப்படும் சேவைமையங்கள் மூலமாக தங்களது ஓய்வூதிய வாழ்வுச்சான்றிதழை சமர்ப்பிக்கலாம்

பிப்ரவரி 2019 முதல் BSNL நிறுவனத்தில் ஓய்வு பெற்றவர்கள் 
SAMPANN எனப்படும் DOTயின் ஓய்வூதிய மென்பொருள் மூலமாக ஓய்வூதியம் பெறுவதால் வங்கிகளுக்கு செல்ல வேண்டியதில்லை. மின்னணு முறையில் வாழ்வுச்சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். தாங்கள் ஓய்வு பெற்ற ஓராண்டு கழித்து
வாழ்வுச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்வுச்சான்றிதழைச் சம்பந்தப்பட்ட 
ஓய்வூதிய கணக்கு அதிகாரியிடம் நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம்.

No comments:

Post a Comment