வேலைக்கேற்ற கூலி
04/11/2016 அன்று சென்னை துணை முதன்மைத்தொழிலாளர்
ஆணையர் அவர்களுடன் நடந்த முத்தரப்புப் பேச்சு வார்த்தையில்
எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில்...
கேபிள் பணி, எழுத்தர் பணி மற்றும் காவல் பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு
அவரவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட
குறைந்த பட்சக்கூலியை வழங்கிடப் பணித்த...
துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையர் அவர்களின்
25/10/2016 தேதியிட்ட உத்திரவை உடனடியாக அமுல்படுத்துமாறு
தமிழ் மாநில நிர்வாகம் 04/11/2016 அன்றே மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்திரவிட்டுள்ளது.
அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை
23/11/2016 அன்று நடைபெறுகிறது.
எனவே 21/11/2016க்குள் முடிவுகள் அமுலாக்கம்
செய்யப்பட்ட விதம் பற்றி தமிழ் மாநில நிர்வாகத்திற்கு
தெரியப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் பிரச்சினை மாவட்ட நிர்வாகங்களின் கையில் உள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் பாவப்பட்ட உறிஞ்சப்படும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு என்ன செய்யப்போகின்றன?
என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
காவல் பணி - ஆயுதம் இல்லாமல்
A பிரிவு நகரம் - ரூ.374/=
B பிரிவு நகரம் - ரூ.312/=
C பிரிவு நகரம் - ரூ.250/=
வழங்கப்பட வேண்டிய கூலி
B பிரிவு நகரம் - ரூ.353/= கூலி வித்தியாசம் நாளொன்றுக்கு ரூ.41=
C பிரிவு நகரம் - ரூ.293/= கூலி வித்தியாசம் நாளொன்றுக்கு ரூ.43/=
மாதம் ரூ.1200/= அளவில் காவல் பணி செய்வோரின் கூலி பறிபோகிறது.
எழுத்தர் மற்றும் கேபிள் பணி
A பிரிவு நகரம் - ரூ.374/=
B பிரிவு நகரம் - ரூ.312/=
C பிரிவு நகரம் - ரூ.250/=
வழங்கப்பட வேண்டிய கூலி
B பிரிவு நகரம் - ரூ.414/= கூலி வித்தியாசம் நாளொன்றுக்கு ரூ.102/=
C பிரிவு நகரம் - ரூ.353/= கூலி வித்தியாசம் நாளொன்றுக்கு ரூ.103/=
மாதம் ரூ.3000/= என்ற அளவில்
கேபிள் மற்றும் எழுத்தர் பணி செய்வோரின் கூலி பறி போகிறது.
நித்தம் நித்தம் பறி போகும்...
அடிமட்டத் தொழிலாளியின்
அன்றாட அப்பமும்...தேநீரும்...
மறுதலிக்கப்படாமல்... மனித நேயத்துடன்...
அவர்களுக்குத் தரப்பட வேண்டும்...
இதுவே நமது மனம் கசிந்த வேண்டுகோள்...
No comments:
Post a Comment