JAO தேர்வு மறுபரிசீலனை
17/07/2016 அன்று நடைபெற்ற JAO 40 சத
இலாக்காத் தேர்வு கேள்விகளில் பல குளறுபடிகள் இருந்தன.
சங்கங்கள் நிர்வாகத்திடம் இதை சுட்டிக்காட்டியும் குளறுபடிகள்
சரி செய்யப்படாமல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
மீண்டும் முடிவுகளைப் மறுபரிசீலனை செய்ய நிர்வாகத்திடம்
தொடர்ந்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில்... தற்போது தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய
GM (FP) தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் முடிவுகளையொட்டி JAO தேர்வு முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று BSNL நிர்வாகம் 16/11/2016 அன்று உத்திரவிட்டுள்ளது. எனவே தற்போது JAO பயிற்சியில் உள்ள தோழர்களுக்கு பணி நியமன உத்திரவு வழங்க வேண்டாம் எனவும் உத்திரவில் கூறப்பட்டுள்ளது. JAO பயிற்சி 18/11/2016 அன்று முடிவடையும் நிலையில் நிர்வாகத்தின் மேற்கண்ட உத்திரவு மேலும் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. தேர்வு முடிவுகள் இந்த வாரமே பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டால் பயிற்சி முடித்தவர்கள் பதவி உயர்வில் பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது. தாமதங்கள் பயிற்சி முடித்தோருக்கு பாதகங்களாக மாறும்.
எந்தப்பிரச்சினையிலும் தும்பை விட்டு
வாலைப்பிடிப்பதே நிர்வாகத்தின் நிலையாக உள்ளது.
No comments:
Post a Comment