7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி
01/01/2016 முதல் ஓய்வூதியச் சலுகைகள் உயர்த்தப்பட்டன.
பணிக்கொடை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டது.
ஆனால் இந்த உயர்வு இன்னும் BSNLலில் அமுல்படுத்தப்படவில்லை. இதை உடனடியாக அமுல்படுத்துமாறு நமது மத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஓய்வூதியர் சங்கங்களும்
இப்பிரச்சினையைத் தீவிரப்படுத்த வேண்டும்.
================================================
BSNL ஊழியர்களது குழந்தைகளுக்கான 2016-17ம் ஆண்டிற்கான TECHNICAL AND NON-TECHNICAL படிப்புகளுக்கான
கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30/11/2016.
================================================
2015-16ம் ஆண்டிற்கான JTO இலாக்காதேர்விற்கான காலியிடங்களை உடனடியாகக் கணக்கிட்டு அனுப்புமாறு மாநில நிர்வாகங்களை CORPORATE அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
2014-15ம் ஆண்டிற்கான காலியிடங்களை நிரப்பியது போக
மிச்சம் உள்ள காலியிடங்களையும் சேர்த்துக் கணக்கிடுமாறு
மாநில நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
================================================
JAO தேர்வில் வெற்றி பெற்ற சில தோழர்கள் JTO தேர்விலும் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களில் சிலர் JAO பதவி உயர்வை மறுத்துள்ளனர். அவ்வாறு மறுக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புமாறு நிர்வாகத்தை நமது மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
================================================
ஓய்வு பெறும் தோழர்களுக்கான விடுப்புச்சம்பளம் அவர்கள் ஓய்வு பெறும் மாதத்திலேயே வழங்கப்பட வேண்டும் என நிர்வாகம் உத்திரவிட்டிருந்தது. ஆனாலும் பல மாநிலங்களில் பட்டுவாடாவில் தாமதம் நிலவுகிறது. ஓய்வு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என நிர்வாகம் மாநில நிர்வாகங்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நமது தமிழ் மாநிலத்தில் விடுப்புச்சம்பளம் தங்கு தடையின்றி அந்தந்த மாதங்களிலேயே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.... பாராட்டுக்குரியது.
================================================
மிகுந்த திறனுள்ள... 700 MHz அலைக்கற்றை வரிசையை நமது BSNL நிறுவனத்திற்கு ஒதுக்குமாறு DOTக்கு நமது CMD வேண்டுகோள் விடுத்துள்ளார். 700 MHz அலைக்கற்றை சக்தி வாய்ந்தது. வீடுகளுக்குள் தடையின்றி சேவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை அதிகமாக சொல்லப்பட்டதால் தனியார் நிறுவனங்கள் எவையும்
இந்த அலைக்கற்றையை வாங்க முன்வரவில்லை.
=============================================
வீட்டு வாடகைப்படி மற்றும் திறன் வளர்ப்புப்படி
78.2 IDA அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
ஆனால் TRAVELLING ALLOWANCE மற்றும்
மருத்துவ சிகிச்சைக்கான பில்கள் 68.8 IDA
அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
இவற்றையும் 78.2 சத IDA அடிப்படையிலேயே
வழங்கப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம்
நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment