நவ -18 செக்கிழுத்த செம்மல் நினைவு தினம்
கப்பலோட்டிய தமிழன் கை வலிக்க இழுத்த செக்கு... |
சோவியத்தில் பொதுவுடமைப் புரட்சி தோன்றியது 1917ல்..
இந்தியாவில் தொழிற்சங்கம் தோன்றியது 1920ல்...
தூத்துக்குடியில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தது 1908ல்..
புரட்சி வெடிக்கும் முன்னே....
தொழிற்சங்கம் பிறக்கும் முன்னே...
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடிய
மாபெரும் தலைவன்தான் வ உ சிதம்பரம் பிள்ளை...
தூத்துக்குடியில் அன்று இருந்த கோரல் நூற்பாலையில்
தொழிலாளர்கள் கோரமாக நடத்தப்பட்டார்கள்...
உரிய கூலி இல்லை... ஓய்வு இல்லை... விடுமுறை இல்லை...
கொடுமை கண்ட வ உ சி கொதித்தெழுந்தார்...
வ உ சியும்... சுப்பிரமணிய சிவாவும்...
தொழிலாளர்களை உணர்வேற்றினர்...
1908 பிப்ரவரி 27ம் நாள் 3 கோரிக்கைகளை முன்வைத்து
வேலை நிறுத்தத்தை வ உ சி துவக்கினார்...
கூலி உயர்வு... வாரத்தில் ஒரு நாள் விடுமுறை... விடுமுறை நாட்கள்
இவைதான் தொழிலாளர் அன்று முன் வைத்த கோரிக்கைகள்...
ஆங்கிலேய அரசு கடுமையான அடக்குமுறையைக் கையாண்டது..
ஆனாலும் அஞ்சாமல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்...
9 நாள் வேலை நிறுத்தத்திற்குப் பின்...
பஞ்சாலை நிர்வாகம் பணிந்தது...
வ உ சி அனைத்து தொழிலாளர்கள் முன்னிலையில்
நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார்...
கூலி உயர்வைக் கொடுக்கவும்...
வேலை நேரத்தைக் குறைக்கவும்...
வார விடுமுறை அளிக்கவும்...
பஞ்சாலை நிர்வாகம் ஒத்துக்கொண்டது...
வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி பெற்றது...
இன்று வ உ சி இல்லை...
ஆனாலும் இந்திய தேசத்தில் இன்றும்...
கூலி உயர்வுக்காகவும்... சலுகைகளுக்காகவும்...
தொழிலாளர்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்...
இந்திய தேச மானம் காக்க..
கடலிலே சுதேசிக் கப்பல் விடுவேன்....
இயலாவிட்டால் கடலிலே விழுந்து உயிரை விடுவேன்..
என்று சூளுரைத்துக் கப்பலோட்டிய தமிழன்...
தொழிற்சங்கம் இல்லாத காலத்திலும்
தொழிலாளரை ஒன்று திரட்டிப் போராடி வென்ற தலைவன்...
செக்கிழுத்த செம்மல் வ உ சி நினைவைப் போற்றுவோம்...
நினைவு கூற வேண்டிய தலைவர்களுள் ஒருவர். பாராட்டுகள்.
ReplyDeleteநினைவு கூற வேண்டிய தலைவர்களுள் ஒருவர். பாராட்டுகள்.
ReplyDelete