கருத்தரங்குகளும்... கால விரயங்களும்...
வாய்ப்பந்தல்வாதிகளைப் பற்றிய
வள்ளுவனின் விமர்சன வாக்காகும்.
நமது இயக்கங்களில்...
இன்று வாய்ப்பந்தல் போடுவது மட்டுமே..
வரிசையாக... விமரிசையாக நடக்கிறது.
செயல்பாடு என்பது செத்து வருகிறது...
வாய்ப்பந்தல் மட்டுமே வளர்ந்து வருகிறது.
இதன் ஒரு அங்கம்தான் கருத்தரங்குகள்.
கருத்தரங்குகள் என்ற பெயரில்
தோழர்கள் அரங்குகளில்
அழைக்கப்பட்டு... அடைக்கப்பட்டு...
சொற்கொடுமைக்கு ஆளாகின்றனர்.
சில வாய்ப்பந்தலார்களின்
வக்கணைப் பேச்சுக்களுக்காக
பல்லாயிரங்கள் செலவிடப்படுகின்றன.
பல நூறு தோழர்களின் உழைப்பும்..
நேரமும் வீணாக்கப்படுகின்றன.
பொதுத்துறை அதிகாரிகளுக்கான
3வது ஊதிய திருத்தக்குழு... 3rd PRC
நீதிபதி.சதீஷ் சந்திரா தலைமையில் 09/06/2016 அன்று அமைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் அந்தக்குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 2016க்குள் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய திருத்தம் 01/01/2017 முதல் அமுல்படுத்தப்படும்.
தொழிற்சங்க உரிமை படைத்த ஊழியர்களுக்கான
7வது ஊதிய மாற்றக்கொள்கை (இரண்டாம் பாகம்)
WAGE POLICY FOR 7th ROUND (2nd PART)
13/06/2013 அன்று DPEயால் வெளியிடப்பட்டது.
இந்த ஊதிய மாற்றம் 01/01/2012ல் இருந்து அமுலாகும்.
இது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியத்தை
மாற்றும் பொதுத்துறைகளுக்கானது.
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் நடத்தும் பொதுத்துறைகளுக்கான WAGE POLICY அறிவிப்பு DPEயால் இன்னும் வெளியிடப்படவில்லை. 2012 ஊதிய மாற்றத்திற்கான வழிகாட்டுதல் 13/06/2013ல் தான் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியானால் 2017 ஊதிய மாற்றத்திற்கான வழிகாட்டுதல் எப்போது வெளியிடப்படும் என்பதுதான் இன்றைய பொதுத்துறை ஊழியர்களின் பெரும் கேள்வியாக உள்ளது. உடனடியாக வழிகாட்டுதலை வெளியிடக்கோரி அனைத்து சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இம்முறை BSNLலில் அங்கீகாரம் பெற்றுள்ள
BSNLEU... NFTE...சங்கங்கள் இணைந்து
பேச்சுவார்த்தையைத் துவக்க வேண்டும்.
முதலில் BSNLEU... NFTE.. சங்கங்களுக்கிடையேயான புரிதல் வேண்டும்.
பின் மற்ற சங்கங்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு
ஒருமித்த கருத்து... கோரிக்கை உருவாக்கப்பட வேண்டும்.
BSNLEU சங்கம் டிசம்பர் 2016ல் நடைபெறும் தனது
அகில இந்திய மாநாட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதால்... ஜனவரி 2017ல்தான் ஊதியக்குழு பற்றிய
கருத்துக்களும்... கோரிக்கைகளும்... உருப்பெறும்... வலுப்பெறும்.
இதனிடையே இன்று 22/11/2016...
திருச்சியில் நடைபெறும்
ஊதிய மாற்றக் கருத்தரங்கு எந்த வித பலனையும்
ஊழியர்களுக்கு அளிக்கப்போவதில்லை.
கருத்துவா(ந் )திகள்...
அங்கே.. பார்... இங்கே... பார்.. என்று
புள்ளி விவரங்களை அள்ளி விடுவார்கள்.
மெல்ல முடியாமலும்... சொல்ல முடியாமலும்...
தோழர்கள் இருக்கையிலே
நெளிந்து...மெலிந்து துன்புறுவார்கள்.
இதற்கு சிறப்பு சிறுவிடுப்பு வேறு...
சிறப்பு சிறுவிடுப்பிற்கான எந்த அடிப்படையையும்
நிர்வாகம் இப்போது பார்ப்பதில்லை.
தலைவர்களின்
அறுபதாம்...எழுபதாம் கல்யாணத்திற்கு கூட...
நிர்வாகம் சிறப்பு விடுப்பு அளிக்கலாம்...
ஆச்சரியப்படுவதற்கில்லை.
காலம்... பொன்னானது...
காசு பணம்... அரிதானது...
உழைப்பு உன்னதமானது...
இவையெல்லாம்...
வீணாகும் நிலை கண்டு...
வீணாக்கும் கொடுமை கண்டு...
மனம் வேதனையில் வெம்புகிறது...
Super sir
ReplyDeleteவேலூர் வலைதளம் ஒரு தோழர் முன்னின்று நடத்தியதாக சொல்லிய சில மணி நேரங்களில் அதை அப்படியே தலைகீழாக பிறகு தலைமையில் நடந்தது என்பது தான் ஒரு மாற்றமாக கருதுகின்றேன் தோழரே
ReplyDeleteNFTE Zindhabad
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅனைத்து விமர்சனங்களையும் போட்டிருந்தால்?
ReplyDeleteஅனைத்து விமர்சனங்களையும் போட்டிருந்தால்?
ReplyDelete