சீர் (கெட்ட) வரிசை...
எட்டு மணி வேலை...
எட்டு மணி வரிசை...
ஏகப்பட்ட அலைச்சல்...
இருபத்து நாலு மணி எரிச்சல்...
இருப்பை போடவும் வரிசை...
இருப்பதை எடுக்கவும் வரிசை...
வரிசை... வரிசை... வரிசை...
இன்று ஆட்சியாளர்கள் தந்த சீர்வரிசை...
இந்தியாவில்...
ஏழுமலையானும்... ATMமும் ஒண்ணுதான்...
இங்கும் வரிசை... அங்கும் வரிசை...
இங்கும் நாமம்... அங்கும் நாமம்...
பஞ்சு மிட்டாய் கேட்டு குழந்தை அழும்...
அஞ்சு ரூபாய் இல்லாமல் மனசு அழும்...
பயன்படாத பஞ்சு மிட்டாய் கலரிலே...
காந்தியோ சிரிப்பாய் சிரிப்பார்...
வரிசையிலும் தூங்குது தொப்புள் கொடிகள்...
அஞ்சு ரூபாய் இல்லாமல் மனசு அழும்...
பயன்படாத பஞ்சு மிட்டாய் கலரிலே...
காந்தியோ சிரிப்பாய் சிரிப்பார்...
வரிசையிலும் தூங்குது தொப்புள் கொடிகள்...
வசதியாகத் தூங்குது அரசியல் கொடிகள்...
வரிசையிலே மக்கள் தூங்கலாம்...
வரிசையிலே மக்கள் தூங்கலாம்...
வரிசையே தூங்கலாமா?
வழி காணும் அரசியலே தூங்கலாமா?
வரிசை... வரிசை... வரிசை...
வழி காணும் அரசியலே தூங்கலாமா?
வரிசை... வரிசை... வரிசை...
நாளும் பொழுதும் வரிசை கண்ட...
நாட்டு மக்கள்...
நாளை ஒரு வரிசை காண்பார்கள்...
நாடாளுவோருக்கு... நிச்சயம்...
நாளை ஒரு வரிசை காண்பார்கள்...
நாடாளுவோருக்கு... நிச்சயம்...
நல்லதொரு பரிசை தருவார்கள்....
வரிசை... நிச்சயம் தரும் உரிய பரிசை...
No comments:
Post a Comment