Tuesday, 16 August 2016

செய்திகள்

2017 ஊதிய திருத்தக்குழுவை உடனடியாக அமைக்குமாறு 
நமது சங்கம் BSNL  நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது. 
DOT  மற்றும் DPE இலாக்காக்களிடமிருந்து...
 ஊதியக்குழு அமைப்பதற்கான வழிகாட்டுதல்கள்
 இன்னும் வரவில்லையென்றும், 
வழிகாட்டுதல்கள் வந்த பின் பணிகள் துவக்கப்படும் எனவும் 
நமது சங்கத்திற்கு BSNL  நிர்வாகம் 
10/08/2016 அன்று பதில் அளித்துள்ளது.
===============================================
JAO ஆளெடுப்பு விதிகளில் கீழ்க்கண்ட...
 மாற்றங்களை  நமது சங்கம் கோரியுள்ளது.
  • ஏற்கனவே JAO பகுதி 1 தேர்வு மற்றும்  SCREENING தேர்வில் தேர்ச்சி பெற்ற  ஊழியர்களை JAO தேர்வெழுத அனுமதிப்பது...
  • கல்வித்தகுதியை 10+2 என தளர்த்துவது...
  • குறிப்பிட்ட சம்பள விகிதத்தில் 5 ஆண்டு சேவை என்பதை மாற்றுவது.
===============================================
லக்னோ தீர்ப்பாயத்தின்  05/05/2016 தீர்ப்பின்படி...
 SENIOR ACCOUNTANT  பதவியை 01/10/2000 முதல்
 அதிகாரிகள் பிரிவில் சேர்ப்பதற்கும்...
 19/02/2003 முதல் அனைத்து சலுகைகளையும் 
முன் தேதியிட்டு தருவதற்கும் 
BSNL  நிர்வாகத்தை நமது சங்கம் வலியுறுத்தியுள்ளது.
===============================================
முன்னாள் SENIOR TOA பதவிகள் 
(G) (P) (T) மற்றும்  (TG) என்று குறிப்பிடப்பட்டதைப் போலவே 
தற்போதைய ASST. SUPDT  மற்றும் SUPDT பதவிகளும் குறிப்பிடப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
மேலும் நாலு கட்டப் பதவி உயர்வுக்கு விருப்பம் தராமல் 
பழைய OTBP/BCRல் தொடர்பவர்களுக்கும் இந்த பதவிப்பெயர் மாற்றம் தொடரும் என நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
===============================================
BSNL தற்போது லாப நிலையை அடைந்துள்ளதால்... 
தற்போதைக்கு பங்கு விற்பனை என்பதற்கு 
இடமில்லை என நமது CMD குறிப்பிட்டுள்ளார்.
===============================================
JTO மற்றும் SDE பதவிகளின்  E1 A மற்றும்  E2 A   சம்பள விகித மாற்றம் மற்றும் E3..E4..   E5.. &  E6..   சம்பள விகிதங்களை மேல்நிலைப்படுத்துதல்  ஆகிய கோரிக்கைகளை பரிசீலிக்க இயலாது 
என DOT  தெரிவித்துள்ளது. 3வது  ஊதிய திருத்தக்குழு  அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஊதியக்குழுவிடம் இது பற்றி முறையிடலாம் எனவும் DOT ஆலோசனை வழங்கியுள்ளது. BSNLன் தற்போதைய நிதி நிலையே மேற்கண்ட முடிவுக்கு காரணமென DOT தெரிவித்துள்ளது.
===============================================
DELOITTE  குழு பரிந்துரையின்படி...
 மகாராஷ்ட்ரா மாநிலத்தில்  தற்போதுள்ள 30 SSAக்கள் 
19 வணிகப்பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
16/10/2016க்குள் அமுல்படுத்திட நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment