Sunday, 14 August 2016

நிற்பேன்... போராடுவேன்...


இன்னும்..
நாங்கள் எதையும் காணவில்லை..
கனக்கிறது வாழ்க்கை...

கைகள் கட்டப்படவில்லை...
சுதந்திரம்!
ஆட்டம் என்னவோ..
பழைய கோமாளி ஆட்டம்தான்...

ட்டம்… 
கால்கள் தரிக்காத ட்டம்..
எங்கும் போய்ச் சேராத ட்டம்...

இது வரமாஇல்லை சாபமா?
நான் நடப்பட்டேனா?
பிடுங்கியெறியப்பட்டேனா?

ஓடிவிடத் துடிக்கிறேன்...
எங்கே ஓடுவேன்
போகுமிடம் எதுவுமில்லை...
நின்றுதான் தீரவேண்டும்..

முழந்தாளில் சரியமாட்டேன்..
நிற்பேன்... போராடுவேன்
உன்னதமான காலம்...
வரத்தான் போகிறதென்று..
நம்பிக்கைக் கொள்வேன்
போராடுவேன்

ஏனென்றால்..
நாங்கள் எதையும் காணவில்லை...
இன்னும் 

விடுதலைத்திருநாளில்.. அடிமைகளின்  நினைவாக...
ஒடுக்கப்பட்ட கறுப்பினக்குயில்டிரேஸி சாப்மன்...கவிதை
TRACY CHAPMAN  in   “NOTHING YET”

No comments:

Post a Comment