ஏய்த்துப்பிழைக்கும் ஈனத்தொழில்...
உள்ளத்தால் உள்ளலும் தீதே... பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வோம் எனல்..
பிறர் பொருளை அபகரிக்க மனதால் நினைப்பது கூட தவறு
என்பது வள்ளுவர் வாக்கு...
ஆனால் நமது தேசத்தில்...
உழைப்பாளிகளைச் சுரண்டுவதும்...
அவர் பொருளை அபகரிப்பதும்
ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது...
ஏய்ப்பதிலும்... அபகரிப்பதிலும்...
தேசம் வளர்ச்சி அடைந்து வருகிறது...
ஆம்.. தோழர்களே...
ஏப்ரல் 2015ல் 10091 நிறுவனங்கள்
தங்களிடம் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு
வைப்புநிதியைக் கட்டவில்லை...
டிசம்பர் 2015ல் 10932 நிறுவனங்கள்
தங்களிடம் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு
வைப்புநிதியைக் கட்டவில்லை..
இதில் அரசு சார்ந்த நிறுவனங்களும் அடங்கும்..
ஏறத்தாழ 2200 கோடி ரூபாய் வைப்புநிதி கட்டப்படவில்லை...
இந்த ஏமாற்றுப்பிழைப்பில் முதலிடம் வகிப்பது...
தமிழகம் என்பது நமக்குத் தலை குனிவான செய்தியாகும்...
தமிழகத்தில் 2644 நிறுவனங்களும்...
மகாராஷ்டிராவில் 1692 நிறுவனங்களும்...
கேரளாவில் 1118 நிறுவனங்களும்...
வைப்புநிதியைக் கட்டாமல் ஏமாற்றுகின்றன...
வைப்பு நிதி கட்டாதவர்கள் 23 சதவீதம் ஆகும்..
நாடு முழுவதும் ஏறத்தாழ
14000 விசாரணைகள் நடைபெற்று வருகின்றன...
காவல் துறை 228 வழக்குகளை பதிவு செய்துள்ளது...
EPF அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை என்று கூறி
விசாரணையில் தாமதங்கள் தொடர்கின்றன...
வைப்புநிதி விவகாரத்தில் முதலாளிகளுக்கு...
பல இடங்களில் EPF அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர்...
வைப்புநிதி விவகாரத்தில் முதலாளிகளுக்கு...
பல இடங்களில் EPF அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர்...
அதை விடக்கேவலம் சில இடங்களில்...
தொழிற்சங்கத் தலைவர்களே பயிரை மேய்வது..
தொழிற்சங்கத் தலைவர்களே பயிரை மேய்வது..
மக்களுக்கான... மக்களாட்சி நடைபெறும் நாட்டில்..
மக்களை ஏமாற்றும் இழிநிலை மாற வேண்டும்...
ஊழியர்கள் கொதித்தெழுந்து போராடாமல்...
இது போன்ற ஈனத்தனங்களை நிறுத்த முடியாது...
No comments:
Post a Comment