தேர்வுகளும்... குழப்பங்களும்
28/08/2016 அன்று நடக்கவிருந்த JTO இலாக்காத்தேர்வும்..
JAO 10 சதக் காலியிடங்களுக்கான தேர்வும்
24/09/2016 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
28/08/2016 தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
13/08/2016 என அறிவிக்கப்பட்டது. அப்போதே தேர்வு தள்ளிப்போகலாம் என்ற செய்தி உலவியது. ஆனால் சங்கங்கள் தேர்வைத் தள்ளி வைக்க கூடாதென்று நிர்வாகத்திடம் வாதிட்டன. தோழர்களும் அதை நம்பி விடுப்பு எடுத்து தேர்வுக்குத் தயாராகி... பல தோழர்கள் சென்னைக்கும் சென்று விட்டனர். தேர்வுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் போது தேர்வைத் தள்ளி வைப்பது தோழர்களின் ஆர்வத்தைக் கெடுப்பது போலாகிவிட்டது.
ஒரு தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதியைத் தள்ளி வைக்கும் போதே
தேர்வு உரிய நேரத்தில் நடக்குமா? இல்லையா ? என்பதை வரும் காலத்திலாவது நிர்வாகம் சரி வர சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் நிர்வாகம் என்ன நினைக்கிறதோ... அது மட்டுமே நடக்கிறது...
தோழர்கள்... மனம் தளராமல் தேர்விற்கு மீண்டும் தயாராகவும்...
தோழர்களே நாளை நடக்கவிருந்த இள நிலை தொலைபேசி அதிகாரிகளுக்கான தேர்வு தள்ளி போன விசயங்கள் அனைத்தும் தாங்கள் அறிந்தது தான். ஆனால் சில செயல்களுக்கான பதில்கள் இன்னமும் பலருக்கு கிடைக்கவில்லை. நிர்வாகம் மிக எளிதாக வ்ழக்கம்போல அதற்கே உரிய வார்த்தையான due to administration policy என்ற வார்த்தையை பயன்படுத்தி அடுத்த மாதம் 24ஆம் தேதிக்கு மாற்றிவிட்டது. இதில் ஆச்சரியபட ஒன்றும் இல்லை. இது நிர்வாகத்தில் இது சகஜமான ஒன்று தான்.. ஆனால் ஹால் டிக்கெட் 10 நாட்களுக்கு முன்பே கொடுக்கபடவேண்டும் ஆனால் தேர்விற்கு இரு நாட்களுக்கு முன் வரை பல காரணங்கள் கதை கட்டி கடைசி வரை தரப்படவே இல்லை. மாநில அளவில் உள்ள ஒரு சில அதிகாரிகள் கடைசிவரை அதாவது நேற்று 26.08.2016 வரை எந்த மையத்தில் எழுதுவது என்று முடிவு செய்யவே இல்லை. மாநில தலைமையும் அகில இந்திய தலைமையும் இந்த பிரச்சனையை முன்னுருத்தி இருந்தால்,சற்று வலிமை கொடுத்து இருந்தால் இப்பிரச்சனையை தடுத்து இருக்கலாம், பரவாயில்லை, ஆனால் முற்பகல் 12மணிக்கெல்லாம் தேர்வு தள்ளிவைப்பு என்ற விசயம் எங்களுக்கே தெரிந்த பொழுது தலைமைக்கு எப்படி தெரியாமல் போனது என்பது ஆச்சரியமாக உள்ளது. தற்பொழுது அடுத்த மாதம் 24ஆம் தேதிக்கு மாற்றபட்ட செய்தி உறுதியாக இருக்குமா என்று தெரியவில்லை. அந்த தேதியில் பல சிக்கல்கள் இருப்பது போல தோழர்கள் நினைக்கின்றனர். சனிக்கிழமை வேலை நாள் ,. தேர்வு நாள் இது வெனில் மாவட்ட நிர்வாகம் தேர்வு எழுத போகும் அனைவரையும் விடுவிக்க வேண்டும். தினப்படி கொடுக்குமா என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.எத்தனை முறை வெற்றி பெற்றோம் என்பதை விட சங்க தோழர்களுக்கு என்ன செய்தோம் என்று சிந்திக்க வேண்டும் வெறும் ஜி பி எஃப் பணம் பெற்று தருவது அல்லது வெறும் மாறுதல் உத்தரவிற்கு தான் சங்கம் என்றால் அல்லது சங்கத்தின் நிலை என்றால் எதிர்கால வெற்றிக்கு இது உத்திரவாதம் கிடையாது. இதை மாநில சங்கமும் மத்தியசங்கமும் கவனத்தில் கொள்ளவேண்டும்
ReplyDelete