ஊதியக்குழுவும்... ஓய்வூதிய உயர்வும்...
ஓய்வூதியம் பற்றிய 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உத்திரவிடப்பட்டுள்ளன. அவற்றில் சில...
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.3500/-லிருந்து ரூ.9000/=மாக உயர்கிறது.
01/01/2016 அன்று 3500 பெற்ற ஓய்வூதியர்கள் DA உடன் சேர்த்து ரூ.7875/= பெற்றார்கள். எனவே நிகர உயர்வு ரூ.1125/= மட்டுமே...
அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000/- ஆக உயர்கிறது...
பணிக்கொடை ரூபாய் பத்து இலட்சத்தில் இருந்து இருபது லட்சமாக உயர்கிறது. விலைவாசிப்படி 50 சதத்தைத் தாண்டும்போது 25 சதம் பணிக்கொடையில் கூடுதல் பலனாக வழங்கப்படும்.
ஆனால் முழு பணிக்கொடை பெறுவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள
33 ஆண்டுகள் முழு சேவை என்பதில் மாற்றமில்லை.
மருத்துவப்படி தற்போது மாதம் ரூ.500/= வழங்கப்படுகிறது.
அதில் ஏதும் மாற்றமில்லை.
குடும்ப ஓய்வூதியம் தற்போதுள்ள நிலையிலேயே தொடரும்.
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9000/- என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இறந்தவர் குடும்பத்திற்கு பத்தாண்டுகளுக்கான..
உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் என்பதிலும் மாற்றமில்லை.
7வது ஊதியக்குழு பரிந்துரைகளில்
பணிக்கொடை 20 லட்சமாக உயர்வு மற்றும்
DA 50 சதம் உயரும்போது 25 சதம் கூடுதல் பணிக்கொடை என்பது மட்டுமே சிறப்பானது. ஏனையவற்றில் மாற்றம் ஏதுமில்லை.
மேற்கண்ட உத்திரவுகள் DOTயால் வழிமொழிந்த பின்
BSNL ஊழியர்களுக்கு அமுல்படுத்தப்படும்.
சரியாக சென்னிர்
ReplyDeleteசரியாக சென்னிர்
ReplyDelete