BSNL... MTNL... விற்பனைக்கு அல்ல...
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள்
தனியாருக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது...
மேலும் BSNL மற்றும் MTNL நிறுவனங்களில்
பங்கு விற்பனை என்பதுவும் கிடையாது என்று
தொலைத்தொடர்பு இலாக்கா துணை அமைச்சர்
திரு.சஞ்சய் தாத்ரே நாடாளுமன்ற மேலவையில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
திரிணமுல் காங்கிரஸ் MP திரு.மனஸ் ரஞ்சன் புனியா எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக ஊழியர்களின் சம்பளம் பட்டுவாடா செய்வதில் தாமதம் நிலவுவதாகவும், விரைவில் இவை சரிசெய்யப்படும்
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
என் கடன் பொதுத்துறை விற்பனையே...
என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய BJP அரசு...
AIR
INDIA, LIC, BPCL போன்ற நிறுவனங்களில் பங்கு விற்பனைக்கும் தனியார் நுழைவுக்கும் அறிவிப்பு செய்த அரசு
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் தனியாருக்கு விடப்படாது
என்று அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
BSNL நிறுவனம் தற்போதைய BJP அரசின் காலத்தில்
அமரர்.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த நேரத்தில்
உருவாக்கப்பட்டது. எனவே தங்களது நல்லாட்சி நாயகன் உருவாக்கிய பொதுத்துறையைக் காக்க வேண்டியது BJP அரசின் கடமையாகும்.
எப்படியோ.. பாரத தேசத்தின் பாரம்பரியமிக்க
தொலைத்தொடர்பு நிறுவனமான
BSNL மக்கள் சொத்தாக தொடர்வது மகிழ்ச்சியே...
No comments:
Post a Comment