செய்திகள்
01/04/2002க்கு முன்பாக கிராமப்புற பகுதிகளில்
32 லட்சம் தரைவழித் தொலைபேசி இணைப்புக்கள் வழங்கியதில் நமது BSNL நிறுவனத்திற்கு ஏற்பட்ட செலவினத்தை ஈடுகட்டும் விதமாக
USO நிதியிலிருந்து ரூ.1250/- கோடி ரூபாய் வழங்குவதற்கு
USO நிதியிலிருந்து ரூ.1250/- கோடி ரூபாய் வழங்குவதற்கு
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுவே இறுதியான ஈடுகட்டும் தொகையாகும்.
இதன் பின் BSNLக்கு கிராமப்புற தொலைபேசி இணைப்புக்கள்
வழங்கியது சம்பந்தமாக உதவிகள் அரசிடம் இருந்து கிட்டாது.
நமது சங்கங்கள் தொடர்ந்து இப்பிரச்சினையை
எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
===============================================
வைப்பு நிதிப்பிரச்சினை காவிரி நதிநீர்ப்பிரச்சினை போலாகிவிட்டது.
DOT கர்நாடகா... BSNL தமிழகம் என்ற காட்சி உருவாகிவிட்டது.
DOT நிதியைத் திறந்து விடாததால் இந்த மாதம் வைப்பு நிதி பட்டுவாடா செய்யப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்ட வைப்பு நிதித்தொகையை BSNLக்கு DOT இன்னும் திருப்பித் தராத நிலையில் தொடர்ந்து நமது நிதியில் இருந்து GPF பட்டுவாடா செய்ய BSNL தயாராக இல்லை.
===============================================
JAO தேர்வில் வெற்றி பெற்ற தோழர்களுக்கான பயிற்சி வகுப்பு சென்னையில் அக்டோபர் முதல் வாரமும்,
JTO PHASE-I பயிற்சி வகுப்பு அக்டோபர் மூன்றாம் வாரமும் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
===============================================
BROADBAND அகன்ற அலைவரிசை இணைப்புக்களில்
BSNL தனது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.
ஆகஸ்ட் மாத நிலவரப்படி 120000 இணைப்புக்கள் குறைந்துள்ளன.
தமிழகத்தில் 13000 இணைப்புக்களும்,
சென்னையில் 18000 இணைப்புக்களும், அதிகபட்சமாக கர்நாடகாவில் 25000 இணைப்புக்களும் SURRENDER செய்யப்பட்டுள்ளன. மிக மலிவான விலையில் நமது நிறுவனம் அதிரடித் திட்டங்களை அறிவித்துள்ள நிலையிலும் இணைப்புக்கள் குறைவது கவலைக்குரியது.
மிக மலிவான விலையில் நமது நிறுவனம் அதிரடித் திட்டங்களை அறிவித்துள்ள நிலையிலும் இணைப்புக்கள் குறைவது கவலைக்குரியது.
ReplyDeleteதிட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக அதைக்காட்டிலும் கவர்ச்சியாக அல்லது அதற்கு இணையாகவேனும் இருக்க வேண்டும். ஆனால் தனியார் 20 எம்பி தரும் அதே வாடகையில் நாம் 2 எம்பி என்றால் எப்படி? சென்னையில் அதே வாடகையில் 8 எம்பி தருகிறார்கள் ஆனால் இலவச அழைப்புகள் இரவில் மட்டும். தனியார் நிறுவனம் எல்லா அழைப்புகளும் இலவசம் என்கிறது இதே வாடகை இதே வேகத்துக்கு. நமது இணைப்புகளாவது ஒழுங்காக இருக்கிறதா? பழுது என்றால் நாம் உடனே விரைகிறோமா? அப்படியே ஓரிரு இடங்களில் விரைந்தாலும் பழுது நீக்க நம்மிடம் தேவையான கருவிகள் இருக்கின்றனவா? எத்தனை ஊர்களில் கேபிள் ரூட் வரைபடம் இருக்கிறது? எத்தனை ஜே டி ஓ க்களுக்குத் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட இடங்களில் கேபிள் பில்லர்களில் ஸ்பேர் எவ்வளவு அதில் பழுதுபட்டது எவ்வளவு என்று தெரியும்? தல நிலைரைகளை அபிவிருத்தி செய்யாமல் உயர் மட்டங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளினாலோ ஊழியர்கள் ஊர்வலங்கள் போய் மக்களைச் சந்திப்பதாலோ மக்களின் அதிருப்தி மாறி விடுமா? என் உறவினர் கோட்ட் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் ஆர்வத்தில் போன மாதம் சுமார் 50 இணைப்புகளுக்கு கான்வாஸ் செய்து விண்ணப்பித்திருந்தார். ஒரு முறை (அது அவரது பத்தாவது நடையாம்) நானும் அவருடன் சென்றேன். அந்த இளநிலை அதிகாரி அலட்சியமாக அந்த ஏரியாவில் கேபிள் இருக்கிறதா என்று லைன்மேன் இன்னும் சொல்லவில்லை. அதனால் இப்போதைக்கு இணைப்பு கொடுக்க முடியாது என்று கூறினார். வந்தவர் ஓய்வு பெற்ற அதிகாரி என்பதால்தான் பொறுமையாக பதில் சொல்வதாகவும் இல்லையென்றால் not feasible report கொடுத்து நிராகரித்திருப்பேன் என்றும் சொன்னார். நடந்தது சென்னையில். மேல் மட்டங்களுக்கு அவர் அளித்த புகார் இன்னும் நிலைவையில் இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, மக்கள் நம்மைவிட்டு வெளியேறுவது தவிர்ப்பது சிரமம்தான்.
Cent percent right sir
ReplyDelete