Sunday, 25 September 2016

வீழ்ந்து விட்டோம்... விழாக்களில்...

இந்த மாதம் வைப்பு நிதி வரவேயில்லை.
வைப்பு நிதி ஏன் பட்டுவாடா செய்யப்படவில்லை?
இந்தப்பிரச்சினைக்கு  நிரந்தரத்தீர்வு என்ன?
யாருக்கும் வெட்கமில்லை... யாருக்கும் கவலையுமில்லை...

DELOITTE குழு  பரிந்துரைகளை 
தமிழகத்தில் அமுல்படுத்த விடமாட்டோம் என்று  சொல்லப்பட்டது. 
முதற்கட்டமாக 4 மாவட்டங்கள் இரண்டு வணிகப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு தமிழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
இதைப்பற்றி எந்த வித கருத்தும் இல்லை...
சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் கூட குரல் எழுப்பவில்லை. 

புதிய இணைப்புகள் கொடுக்க வகையற்ற இடங்களில் 
TECHNICALLY NOT FEASIBLE இடங்களில்...
புதிய இணைப்புக்கள் கொடுக்கும் பணியை  
குத்தகை மூலம் தனியாருக்கு கொடுக்க நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. இந்த இணைப்புக்கள் மூலம் கிடைக்கும் 
வருமானத்தில் 35 சதம் தனியாருக்கு வழங்கப்படுமாம்.
இதைப்பற்றியும் தமிழ் மாநிலச்சங்கத்தில்... 
எந்தவித கருத்தும் இல்லை. கவலையுமில்லை.

ஆனால் விழாக்கள் மட்டும்...
விறுவிறுப்பாகக் கொண்டாடப்படுகின்றன...
தனி நபர்கள் தலை மேல் வைத்து கூத்தாடப்படுகிறார்கள்..
தவிக்கும் தொழிலாளர்களோ பந்தாடப்படுகிறார்கள்...

மாநில மாநாடுகள்... மாவட்ட மாநாடுகள்... 
கிளை மாநாடுகள்... சிறப்புக்கூட்டங்கள்... 
பாராட்டு விழாக்கள்...கருத்தரங்கங்கள்...
பொன்விழாக்கள்... வைரவிழாக்கள்...
தங்க விழாக்கள்... தகர விழாக்கள்...
முப்பெரும் விழாக்கள்... நாப்பெரும் விழாக்கள்...
என விழாக்கள் வட்டம் கட்டி கொண்டாடப்படுகின்றன...
தொழிலாளர் பிரச்சினையோ கட்டம் கட்டப்படுகிறது...
மாநில மாநாடுகளில் கூட... 
ஊழியர் பிரச்சினையைப் பற்றி பேச இயலவில்லை... நேரமில்லை...

நமது நிலைமையையும்... 
தலைமையையும்  எண்ணிப்பார்க்கும் போது....
கூட்டத்திற் கூடிநின்று 
கூவிப் பிதற்ற லன்றி, 
நாட்டத்திற் கொள்ளாரடீ!- கிளியே! 
நாளில் மறப்பாரடீ!
இவர் வாய்சொல்லில் வீரரடி.. கிளியே..
என்ற பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகிறது...

4 comments:

  1. அருமையான விஷயம்..,

    ReplyDelete
  2. இது மட்டுமா தோழர் சனிக்கிழமை தேர்வு உங்களின் பார்வைக்கு, காலை 8மணி என்று நேரம் குறிப்பிடபட்டதால் 7 மணிக்கு முன்பாகவே தோழர்கள் குவிந்து விட்டனர். ஆனால் அந்த இடத்தை தகுந்த நேரத்திற்கு சென்றாலும் , யாராலும் அந்த முகவரியை தொடர்பு கொள்ளமுடியவில்லை, 1/138 மவுண்ட் பூந்தமல்லி ஹை ரோடு எஸ் பி ஐ பில்டிங் இது தான் கொடுத்த முகவரி, நாம் கூகுள் துணை கொண்டு தேடி பார்த்தோம், அது காட்டியது எஸ் பி ஐ பில்டிங் ஆனால் அந்த கட்டிடத்தில் ஒரு பெயர் பலகை கூட இல்லை. மேலும் அருகில் உள்ளவர்களிடம் கேட்டால் ஒருவருக்கும் தெரியவில்லை இருந்தும், ஒரு வழியாக கண்டி பிடித்து சென்றால் சிறு வயது இளைஞர்கள், வயதிற்கு மரியாதை கொடுக்காமல் , இங்கே இப்படி நில்லுங்கள் அங்கு செல்லுங்கள் என்று ஒரே ரகளை, இதை விட கொடுமை கைபேசி இருக்கின்றதா என ஒவ்வொரு அலுவலரையும் சோதனையிட்டனர். இது நான் எங்குமே பார்க்காதது. காரைக்குடி தோழர்களும் ஒரு பெண்மனியும் தான் எதிரத்து கேட்டன்ர். அங்கு நடந்தவை ஏராளம் சொல்லுவதற்கு கூச்சம், இதெல்லாம் மாநில தலைமைக்கு தெரியாதது ஒன்றும் பெரிய விசயமல்ல... நமக்கென்ன ந்மக்கு தேவை சந்திப்புகளும் (சச்சரவில்லாத), ப்ளாஷ் சாட்டுகள் மட்டும் தான்,,,இப்படியே சென்றால் அடுத்த தேர்த்லில் ????????

    ReplyDelete
  3. அடுத்து DELOITTE குழு பரிந்துரைகளை அமுல்படுதிய மாவட்டங்களில் இருந்து தான் மாநில செயலர்கள் தேர்வு செய்யபட்டவர்கள் . அவர்களின் இரு மாவட்ட்ங்களையே அமல் படுத்தியதால் சிறு சந்தேகம் எழுகின்றது, நி பாலமுருகன் 9486108311

    ReplyDelete
  4. அருமையான விஷயம்..,

    ReplyDelete