இருந்தால் இருந்தோம்... எழுந்தால்..
டெல்லியில் நடைபெற்ற சிறந்த ஊழியருக்கான
விருது வழங்கும் விழாவில் பேசிய நமது இலாக்கா அமைச்சர்
உடனடியாக BSNL நிறுவனம்...
ஒரு லட்சம் கிராமப்பஞ்சாயத்துக்களை OFC மூலம் இணைப்பது...
2.5 லட்சம் கிராமங்களை அகன்ற அலைவரிசை இணைப்புக்களின்
மூலம் இணைப்பது... என்ற பிரதமரின் விருப்பத்தை உடனடியாக
நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தொலைத்தொடர்பு சந்தையில் தனது பங்கை...
BSNL நிறுவனம் தற்போதைய 10.4 சதத்திலிருந்து
15 சதமாக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துப் பழுதுகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
இதில் ஏற்படும் தாமதங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது
என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.
BSNL அதிகாரிகளும் ஊழியர்களும்
திறம்பட பணி செய்ய வேண்டும்..
அவ்வாறு பணி செய்ய இயலாதவர்கள்
விருப்ப ஓய்வில் சென்று விடலாம்
என்றும் அழுத்தமுடன் கூறியுள்ளார்.
இருந்தால் இருங்கள் ... இல்லாவிட்டால் ஓடுங்கள்
என்று ஊழியர்களைப் பார்த்து அமைச்சர் கூறுகிறார்.
அமைச்சர் என்ற முறையில் அவருடைய பாணி சரிதான்.
ஆனால் இதே பாணியில்...
மக்களும் மந்திரிகளைப் பார்த்து கூறும் காலம் வர வேண்டும்.
இதுவே நமது விருப்பம்.
இருந்தால் இருந்தேன்... எழுந்தால் பெருங்காளமேகம் பிள்ளாய்...
என்று தன்னை ஏளனம் செய்தவனைப் பார்த்து
கவிக்காளமேகப் புலவன் பாடினான்...
தொழிலாளி வர்க்கமும் அப்படித்தான்...
இருந்தால் இருக்கும்... எழுந்தால்...
கோடிக்கால் பூதமடா... கோபத்தின் ரூபமடா...
No comments:
Post a Comment