ரோஜாவின் அரும்பு
புனிதரான அன்னை தெரேசா |
அல்பேனியன் மொழியில்...
ஆக்னஸ்...என்ற அவரது இயற்பெயருக்கு
இதுதான் பொருள்...
பிரான்ஸ் நாட்டின் அருட்கன்னியாக விளங்கி..
ஏழைகளுக்கு தொண்டாற்றி இளம் வயதில் மறைந்த
தெரேசா மார்ட்டின் நினைவாகத் தன் பெயரை
தெரேசா என்று மாற்றிக்கொண்டார் ஆக்னஸ்..
கல்கத்தாவின் துப்புரவுத் தொழிலாளிகள் அணியும் உடையை
காலமெல்லாம் தன் சீருடையாக மாற்றிக்கொண்டார்...
1964ல் இந்தியா வந்த போப்பாண்டவருக்கு
அன்றைய அமெரிக்க அதிபர் ஜான்சன்
விலையுயர்ந்த காரை பரிசாக அனுப்பி வைத்தார்...
போப்பாண்டவர் அதை அன்னை தெரேசாவிற்கு பரிசளித்தார்..
அந்தக்காரை தான் பயன்படுத்தாமல் ஏலத்தில் விட்டு...
அறக்கட்டளை நிதியில் அந்தப்பணத்தைச் சேர்த்தார்...
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு..
அவருக்கு நடத்தப்படவிருந்த பாரம்பரிய விழாவை மறுத்தார்..
விழாச்செலவான 192000 டாலர்களையும்...
வீழ்ந்து கிடக்கும் ஏழைகளுக்கு தந்துதவிட வேண்டுகோள் விடுத்தார்...
எல்லோரிடமும் நீங்கள் கையேந்தலாமா?
என்று அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்ட போது...
எல்லோரிடமும் நான் இறைவனைக் காண்கிறேன்.. என பதிலளித்தார்...
தொழு நோயாளிகளைத் தொடும்போது...
இறைவனைத் தொடுவதாக உணர்கிறேன்...
என்பது அவரது இதயசுத்தியான வார்த்தை...
ஆசிரியர்... செவிலியர்... இவையிரண்டும்
தனக்குப் பிடித்த பணிகளாக குறிப்பிட்ட அன்னை தெரேசா...
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று உலகை நீத்தார்...
சபிக்கப்பட்டவர்களின் வாழ்வை...
ஆசீர்வதிக்கச் செய்த அன்னை தெரேசாவின்...
புனிதர். தெரேசாவின் புகழ் ...
அல்பேனிய ரோஜா போல் என்றும் மணக்கும்... நிலைக்கும்...

No comments:
Post a Comment