காரைக்குடியில் TMTCLU கலைப்பு
அடிமட்டத் தோழனின் வலிகளை..
வேதனைகளைப் புரிந்தவன் என்ற அடிப்படையில்..
காரைக்குடி TMTCLU ஒப்பந்த ஊழியர் சங்க
மாவட்டச்செயலராக பணி செய்ய உணர்வுடன் சம்மதித்தேன்.
தோழர்.ஆர்.கே.,,அவர்கள் மாநிலத்தலைவராக இருந்ததினால்
கூடுதல் நம்பிக்கையுடன் பொறுப்பேற்றேன்.
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கூடினோம்...
தீர்மானங்கள் இயற்றினோம்.. தலைவர்களைப் போற்றினோம்...
காலம் பல கடந்தாலும் ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளில்
எந்த வித முன்னேற்றமும் இல்லை.
குறைந்தபட்சம் சம்பளத்தையாவது..
உரிய தேதியில் வழங்க வைக்க முடியவில்லை.
அடையாள அட்டை... மருத்துவ அட்டை...
வைப்பு நிதி, போனஸ், எட்டுமணி வேலை என
எதையுமே நான் பொறுப்பேற்ற சங்கத்தால்
நிறைவேற்ற இயலவில்லை.
மாவட்டத்தில் எங்கள் பலத்திற்கேற்ப
நாங்கள் போராடிய போது...
அப்போதைய தமிழ் மாநிலத்தலைமையால்
நாங்கள் தனிமைப் படுத்தப்பட்டோம்...
நிர்வாகத்திடம் பொல்லாதவர்கள் என
கொளுத்திப் போடப்பட்டோம்.
TMTCLU என்னும் பெயரிலே ஏதேதோ நடந்தது...
ஊழியர்களுக்கு நல்லதைத் தவிர...
கடலூர்... குடந்தை என அணி சார்ந்த இடங்களில்
ஒப்பந்த ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டது.
ஆனாலும் என்ன செய்ய?
தலைவர்களைப் போற்றிப் புகழ்ந்ததைத் தவிர...
ஒப்பந்த ஊழியரின் நிலை கண்டு...
ஓய்வு பெற்ற பின்னும் நிம்மதி இல்லை...
எனவே செயல்படாத... ஒப்பந்த ஊழியரின் நலனில்
சிறிதும் அக்கறை இல்லாத TMTCLU என்னும்
பயனற்ற அமைப்பைக் கலைக்கின்றோம்...
விரைவில் உரிய வழி காண்போம்...
தோழமையுடன்
சி.முருகன்
TMTCLU - முன்னாள் மாவட்டச்செயலர்.
நேர்பட பேசுவது நல்லதத்தலைவனுக்கு அழகு. தோழர்.முருகனைப்போல் தைரியம் எந்த அணி தலைவனுக்கும் இல்லை உண்மையை உள்ளபடி சொன்ன TMTCLU-முன்னாள் மாவட்டச்செயலர். சி.முருகன் அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteஆனால் தாங்கள் தங்கள் பெயரை சொல்ல தைரியம் இல்லை போலும் -கடலூர் நந்தகுமார்
Delete