முத்தரப்பு பேச்சுவார்த்தை
10/01/2017 அன்று டெல்லியில் தொழிலாளர் நல அமைச்சர்
திரு.பண்டாரு தத்தாத்ரேயா அவர்களின் தலைமையில்
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டத்திருத்தம் பற்றி
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
12 மத்திய தொழிற்சங்கங்களும், 14 தொழில் நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. அனைத்து மாநில தொழிலாளர் நலச்செயலர்கள் நிர்வாகத்தின் சார்பாக கலந்து கொள்கின்றார்கள்.
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு என்பது சட்ட வடிவில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றார்கள்.
குழந்தைத்தொழிலாளர்களில் குறிப்பாக பெண்குழந்தைகள்
வீட்டு வேலைக்குப் பயன்படுத்தப்படும் கொடுமை
நாடு முழுக்க நடைபெற்று வருகிறது.
அமைச்சர்கள், நாடாளும் பிரதிநிதிகள், அதிகாரிகள்
குறைந்த பட்சம் தங்கள் வீடுகளில் பெண்குழந்தைகளை
வீட்டு வேலைக்குப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர்கள்...
தேசத்தின் அவமானம்...
என்று அரசு வெறும் வெற்று விளம்பரம் செய்வதால் மட்டுமே
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாது.
No comments:
Post a Comment