Monday, 2 January 2017

மூன்று ஆயுதங்கள்...

தாழ்த்தப்பட்ட மக்களே...
ஒடுக்கப்பட்ட மக்களே...
மூன்று ஆயுதங்களைக் கையிலெடுங்கள்...
அப்போதுதான் உங்கள் விடுதலை பிறக்கும்...
என்று 1827ல் மகாராஷ்டிராவில் பிறந்த 
மகாத்மா ஜோதிராவ்  பூலே..
மக்களை அறைகூவி அழைத்தார்...

அண்ணல் காந்தியடிகளுக்கு முன்பே...
மகாத்மா என மக்களால் அழைக்கப்பட்டவர் அவர்...
கல்வி... அறிவியல்... அதிகாரம்...
இவைதான்  அவர் நம்மை
கையெலெடுக்கச் சொன்ன மூன்று ஆயுதங்கள்...

கல்வி இல்லாமல் விடுதலை இல்லை 
என ஆணித்தரமாய் உரைத்தார் பூலே...
இல்லத்தை பள்ளிக்கூடமாக்கினார்...
பள்ளியறையை படிப்பறையாக்கினார்...
தனது மனைவிக்கு கற்பித்தார்...
தனது மனைவியை கற்பிக்க வைத்தார்...
அவரது மனைவி சாவித்திரிபாய்..
ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு கல்வி தந்தார்...
ஒடுக்கப்பட்ட பெண்களைப்  போராட வைத்தார்...
அவரது  பிறந்த தினம்தான்  இன்று...  03/01/1831...

பூலே  சொன்ன மூன்று ஆயுதங்களில் 
கல்வியும்.. அறிவியலும் நம் கைகளில் வந்து விட்டன...
அதிகாரம் மட்டுமே இன்னும் நமக்கு அகப்படவில்லை...
லஞ்சமும்... வஞ்சமும் நிறைந்த இந்நாட்டில்...
அதிகாரம் அவ்வளவு எளிதில்...
அடித்தட்டு மக்களுக்கு வந்து விடாது...

ஜோதிராவ் - சாவித்திரி பாய் 
தம்பதியினருக்கு வாரிசுகள் இல்லை... 
இந்நாட்டின் ஒடுக்கப்பட்ட... தாழ்த்தப்பட்ட மக்கள் 
அனைவருமே அவர்களது வாரிசுகள்...

அவரது வாரிசுகளாய்.. களம் காண்போம்... 
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் 
என்னும் இழிநிலை மாற்றுவோம்...
ஒடுக்கப்பட்டவன்... கையில் அதிகாரம்
என்னும் உன்னத நிலை எய்துவோம்...

No comments:

Post a Comment