வைப்பு நிதியும் ஆதார் எண்ணும்..
EPF வைப்பு நிதித்திட்டத்தில் உறுப்பினராக உள்ள ஊழியர்கள் தங்கள் ஆதார் எண்ணை 31/01/2017க்குள் இணைத்திட வேண்டும் என தொழிலாளர் நல அமைச்சகம் உத்திரவிட்டுள்ளது. அவ்வாறு ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமும், ஓய்வூதியப்பங்களிப்பும் நிறுத்தப்படும்
எனவும் அரசு மிரட்டலாக அறிவித்துள்ளது.
பத்தாண்டுகள் உறுப்பினராக இருந்த ஊழியர்களுக்கு அவர்களது ஓய்விற்குப்பின் ரூ.1000/= மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஊழியர்களின் சம்பளத்தில் 1.16 சதம் ஓய்வூதியப் பங்களிப்பாக மாதந்தோறும் அரசால் செலுத்தப்படுகிறது. ஏறத்தாழ 850 கோடி ரூபாய் ஆண்டு தோறும் அரசு ஓய்வூதியப்பங்களிப்பு செய்கிறது.
ஒப்பந்த ஊழியர்கள் 31/01/2017க்குள் கட்டாயம்
தங்களது ஆதார் எண்ணை வைப்பு நிதிக்கணக்குடன் இணைக்கவும்.
No comments:
Post a Comment