செய்திகள்
விடுபட்ட சில கேடர்களுக்குப் பதவிப்பெயர் மாற்றம் செய்வதற்காக DESIGNATION COMMITTEE பதவிப்பெயர் மாற்றக்குழு
13/01/2017 அன்று கூடுகிறது. ஊழியர் தரப்பில்
NFTE மற்றும் BSNLEU சார்பாக தோழர்.C.சிங்,
தோழர்.அபிமன்யு மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
------------------------------------------------------------------------
01/01/2017 முதல் 0.8 சத IDA குறைவிற்கான DPE உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய IDA 119.5 சதமாகும்.
------------------------------------------------------------------------
BSNL உருவான பின் முதல் 9 மாதங்களில்
ஓய்வு பெற்றவர்களும், 01/10/2000க்கு முன்பு பதவி உயர்வு பெற்றவர்களும் ஓய்வூதியக்குறைவை சந்தித்தார்கள்.
அவர்கள் தங்களுக்குப் பின்பு ஓய்வு பெற்றவர்களை விட குறைவான ஓய்வூதியத்தை இன்றும் பெற்று வருகின்றனர். BSNLலில் அமைக்கப்பட்ட ANOMALY COMMITTEE இப்பிரச்சினையை தீர்க்கவில்லை. எனவே AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம் வழக்குத் தொடுத்தது. தற்போது வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. DOT நீதிமன்றத்தீர்ப்பை அமுல்படுத்துகிறதா அல்லது மேல்முறையீடு செல்கிறதா என்பது விரைவில் தெரிந்து விடும். வழக்கு மன்றம் சென்று நியாயம் பெற்ற AIBSNLPWA சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------
ஒரு காலத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் கருணை அடிப்படையில் எழுத்தர் வேலை பெற்றனர். தற்போது எழுத்தர் பணிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக கணிணியில் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். அவ்வாறு பட்டயப்படிப்பு படிக்காதவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை நிறுத்தப்படும் என்பது BSNL உத்திரவு. அவ்வாறு COMPUTER DIPLOMA முடிக்காத SR.TOA தோழர்களுக்கு ஒரு மாதப் பயிற்சி அளிக்க இலாக்கா உத்திரவிட்டுள்ளது. கருணை அடிப்படையில் SR.TOA பணி நியமனம் பெற்று COMPUTER DIPLOMA முடிக்காத தோழர்களுக்கு மேற்கண்ட உத்திரவு பொருந்தும்.
No comments:
Post a Comment