அறிவிப்புக்கள் அமுலாகுமா?
குறைந்த பட்சக்கூலி
குறைந்த பட்சக்கூலி நாளொன்றுக்கு 350/= (C பிரிவு நகரங்களில்)
என்று மத்திய அரசு 01/09/2016 அன்று தனது அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 90 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன் பின் நிர்வாக உத்திரவு மூலம் குறைந்த பட்சக்கூலி அமுலாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் 4 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் குறைந்தபட்சக்கூலி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரம் சம்பளத்தை ரொக்கமாக பட்டுவாடா செய்யக்கூடாது என்று மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது. எதெற்கெல்லாமோ அவசரச்சட்டம் போடும் மத்திய அரசு அடிமட்ட ஊழியர்களுக்கான கூலி உயர்வுக்கு
ஒரு நிர்வாக உத்திரவு போடக்கூடாதா?
---------------------------------------------------------------------------------------------------------
3வது ஊதிய திருத்தக்குழு
பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய திருத்தக்குழு
09/06/2016 அன்று அறிவிக்கப்பட்டு மத்திய அரசின் அரசிதழில் GAZETTE அறிவிப்பு செய்யப்பட்டது. அறிவிப்பு செய்யப்பட்ட 6 மாத காலங்களுக்குள் ஊதியக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசிதழில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் ஊதியக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. ஆறு மாதங்கள் கடந்து
7 வது மாதமும் ஆகிவிட்ட நிலையில் 10 மாதங்கள் காத்திருந்து பிரசவிப்பார்களா என தெரியவில்லை.
No comments:
Post a Comment