திரிசூலம் லால்-பால்-பால்…
இந்திய விடுதலை வரலாற்றில்
திரிசூலங்களாய்த் திகழ்ந்தவர்கள்
லாலா லஜபதிராய்
பால கங்காதர திலகர்
விபின் சந்திர பால்..
என் மீது அடிக்கப்படும் ஒவ்வொரு அடியும்
ஆங்கிலேய சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்
என்று வீர முழக்கமிட்ட லாலா லஜபதிராய்
அவர்களின் பிறந்த தினம் ஜனவரி 28…
சைமனே திரும்பிப்போ என்று குரலெழுப்பி
ஆங்கிலேயரிடம் அவர் தடியடி பட்ட காட்சி
பகத்சிங்கின் மனதில் விடுதலைத் தீயை மூட்டியது…
பாரதியாரும்… பகத்சிங்கும்…
இவரைத் தன் குருவாக வரித்துக்கொண்டார்கள்…
இந்திய அரசியலில்..
இந்துத்துவத்தை முன்னிறுத்தியதில்
இவருக்கு தொடர்பிருந்தாலும்…
இந்திய விடுதலைப் போராட்டத்தில்...
இவருடைய பங்கு இணையற்றது…
No comments:
Post a Comment