ஊரான்... தோட்டத்திலே...
நிதி நிலையைக் கருத்தில் கொண்டு
BSNL மற்றும் ITI நிறுவனங்களை மூடிவிடவோ...
அல்லது தனியாருக்குத் தாரை வார்க்கும்
முயற்சியில் ஈடுபடவோ... வேண்டும் என
தொலைத்தொடர்பு அமைச்சகத்தை
நிதி அயோக்கிய NITI AAYOG அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
NITI AAYOG அமைப்பின் பரிந்துரையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேட்டு பிரதமர் அலுவலகம் DOT செயலருக்கு 30/12/2016 அன்று கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்கண்ட செய்தியைப் படிக்கும் போது...
ஊரான்.. ஊரான்...தோட்டத்திலே...
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்...
காசுக்கு இரண்டு விற்கச்சொல்லி...
கடிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்...
என்று வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியிலே...
பாடப்பட்ட நையாண்டிப் பாடலே நினைவுக்கு வருகிறது...
விற்பதற்கும்... மூடுவதற்கும்...
BSNL வெள்ளரிக்காய் அல்ல...
செம்மலர்கள் பூத்த புரட்சித்தோட்டம்...
கோபத்தைக் காட்டி...
நம் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை...
No comments:
Post a Comment