ஒன்றுபடுத்து…
அல்லது ஓரங்கட்டு…
அரிதார
அரிச்சந்திரர் ஆர்.கே.,
சூது…
வாது… சேது…
படிப்பு…
நடிப்பு.. பட்டாபி
இணைந்து விட்ட
மூவரணி...
NFTE இயக்கத்திற்கு
இறுதிச்சாசனம்
எழுதிக்கொண்டு இருக்கின்றது…
இவர்கள் இயக்கத்திற்கு
எதிராக கரம் கோர்த்தனர்…
மதுரையிலே
இயக்கத்தைத் துகிலுரிந்தனர்…
துகிலுரிந்த
துச்சாதனர்களின்
துரோகத்திற்கு…
பாவப்பட்ட
பல்லக்குத் தூக்கிகளும் பலியாயினர்…
அறிவுக்கொழுந்து பட்டாபியும்…
அமோகமாக
அரியணையில் அமர்ந்தார்…
அறிவைத்
தீட்டினார்…தீட்டினார்… தீட்டினார்.
வேலூர்…
சேலம்...கடலூர்...குடந்தை…
நாலு
ஊரு நமக்குப்போதுமென..
திட்டம்
தீட்டினார்…தீட்டினார்… தீட்டினார்.
இளம்
பல்லக்குத்தூக்கிகளை
இலகுவாக
உருவாக்கினார்…
கூட்டுறவைக்
கூடவே வைத்துக்கொண்டார்…
கேட்பதற்கு
எவருமின்றி ஏகபோகமானார்…
மதுரை
போனது… வேலூரும் வந்தது…
வேலூரிலே
பல்லக்கிலே அமர்ந்து விட
வேதாளமும்
துடியாய்த் துடித்தது…
வேதாளம்
பல்லக்கிலே அமர்ந்து
விட்டால்
பாதாளத்திற்கு சென்று
விடும் சங்கமென…
உணர்வு
கொண்ட பல்லக்கு தூக்கிகள்…
ஊழல்
வேதாளத்திற்கு
எதிராக…
உரிமைக்குரல்
கொடுத்தனர்…
மூவரணி
மூளையைக் கசக்கியது…
அறிவுக்கொழுந்தின் அரும்பெரும்
உபாயத்தால்…
தலைதப்பித் தலைவரானது ஊழல் பெருச்சாளி…
நிமிடத்திற்கொரு பேச்சாளியும்…
கூட்டுறவுப்
பெருச்சாளியும்…
நிம்மதிப்
பெருமூச்சு விட்டனர்…
இதோ…
இன்று…
கூட்டுறவாய்
வாழ வேண்டிய சங்கம்…
கூட்டுறவுச்
சங்கத்தின் எடுபிடிகளால்…
கூனல்
விழுந்த சங்கமானது…
என்ன
கொடுத்தும் ஒற்றுமை…
என்னையே
கொடுத்தும் ஒற்றுமை…
என்பது
நமது தாரக மந்திரம்….
அதுவே
அடிமட்டத் தொண்டனின் ஆசை…
மூவரணியோ…
ஒற்றுமை
வர விடாமல் தடுக்கிறது…
ஒற்றுமை
வந்துவிடுமோ என தவிக்கிறது…
மூவரணியின்
முகத்திற்கு எதிரே கேட்கிறோம்…
இயக்கத்தை
ஒன்றுபடுத்துங்கள்…
இல்லையேல்
ஓரங்கட்டுங்கள்…
எத்தனையோ கறி இருக்க…
பிள்ளைக்கறி
தின்று..
உங்கள்
பெரும்பசி அடங்க வேண்டாம்..
இயக்கத்தை
விட்டு விடுங்கள்…
அது
தானே தழைத்து விடும்…
தனியே
பிழைத்து விடும்…
NFTE…
எரிந்து விழும்
சாம்பலிலும்…
எழுந்து விடும்
பீனிக்ஸ் பறவை..
No comments:
Post a Comment