Wednesday, 29 March 2017

JAO ஆளெடுப்பு விதிகள்

JAO ஆளெடுப்பு விதிகளில் சில திருத்தங்களைப் புகுத்தி BSNL நிர்வாகம் 23/03/2017 அன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் மீது கருத்து தெரிவிக்க விரும்பும் சங்கங்கள் இன்று 30/03/2017க்குள் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நமது கருத்துக்கள் சில…

ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது
 அதனைப் பற்றி முழுமையாக ஊழியர் சங்கங்கள் விவாதித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் எனக்கூறுவது 
ஏதோ கண்துடைப்பு என்றே கருதவேண்டியுள்ளது.

இலாக்கா ஊழியர்கள் தேர்வு எழுதும் வயது 53லிருந்து 55ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 55 வயதில் அதிகாரியாக ஆவதால் பலன் ஏதும் இல்லை. 55 வயதில் அதிகாரி  என்பது LATE MARRIAGE தாமதத்திருமணம் போன்றதே. ஏதோ திருமணம் நடந்ததே
 என்ற திருப்தியைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது.

இதுவரை இலாக்கா ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 சத ஒதுக்கீடு 25 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. SR.ACCOUNTANT/JR.ACCOUNTANT ஆகிய கேடர்களுக்கு 5 சதமும் மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கு 
20 சதமும் என ஒதுக்கீடு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 
இது BSNL  நிர்வாகம் இலாக்கா ஊழியர்களுக்கு
 செய்யவிருக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.

SR.ACCOUNTANT/JR.ACCOUNTANT  கேடர்களில் எண்ணிக்கைப் பெருமளவு குறைந்து விட்டது. AO சம்பளத்தையும் தாண்டி
 மூத்த தோழர்கள் பலர் SR.ACCOUNTANT ஆகப் பணிபுரிகிறார்கள்.
 அவர்களை அப்படியே மேல்நிலைப்படுத்த வேண்டும் 
என்ற கோரிக்கையும் உள்ளது. 

இந்நிலையில் SR.ACCOUNTANT/JR.ACCOUNTANT  கேடர்களுக்குத் தனியாக ஒதுக்கீடு என்பது தேவையற்றது. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்வுகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே தோழர்கள் தேர்வெழுதினர். எனவே இலாக்கா ஊழியர்களுக்குள் இருவித ஒதுக்கீடு என்பது தேவையற்றது. 

NE-6 சம்பள விகிதத்தில் 3 ஆண்டு சேவை மற்றும் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன.
முன்பு பல தோழர்கள் GR’D கேடரிலிருந்து கூட JAOவாகப் பணி புரிந்தனர். பட்டப்படிப்பு என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட பின்
 அந்த ஊழியர் எந்தக்கேடரில் இருந்தால் என்ன? 
எனவே NE-6 சம்பள விகிதத்தில் 3 ஆண்டு சேவை 
என்ற நிபந்தனை நீக்கப்பட வேண்டும்.

இன்று JE கேடரில் பொறியியல் பட்டப்படிப்பு படித்த பல தோழர்கள் பணிபுரிகின்றார்கள். கடந்த தேர்வில் கூட அவர்களே பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர். பொறியியல் பட்டதாரிகள் கணக்கதிகாரியாகப் பணிபுரிவது கூடுதல் பலனைக் கொடுக்கும். தொழில்நுட்பங்களைப் புரிந்து கொள்ளவும்.. 
ENGINEERING தோழர்களோடு நல்லுறவைப் பேணவும் 
அவர்களது கல்வித்தகுதி கைகொடுக்கும். 

இத்தகைய நிலையில் ஏராளமான தகுதியுள்ள இளைஞர்கள்
 பதவி உயர்வுக்காக காத்திருக்கையிலே 75 சத ஒதுக்கீட்டை வெளியாட்களுக்கு ஒதுக்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல எதிர்த்துப் போராட வேண்டிய பிரச்சினையுமாகும்.

எனவே நிர்வாகம் 75 சதக் காலியிடங்களை 
ஒரே ஒதுக்கீடாக இலாக்கா ஊழியர்களுக்கும், 
25 சதக் காலியிடங்களை வெளியாட்களுக்கும் ஒதுக்க வேண்டும்.

அதிகாரிகளாக வெளியாட்கள் நேரடியாக வந்து 
பணிசெய்வதை விட இலாக்காவில் ஊழியராக அனுபவம் பெற்றவர்கள் வந்தமர்ந்து பணிசெய்வது சிறப்பானது. இலாக்காவிற்கு கூடுதல் பலன் தரத்தக்கது.

எனவே நிர்வாகம் JAO ஆளெடுப்பு விதியில் 
75 சதம் இலாக்கா ஊழியர்களுக்கு ஒதுக்க வேண்டும் 
என்பதே ஊழியர்களின் ஒட்டுமொத்தக்கோரிக்கை.

No comments:

Post a Comment