Sunday, 19 March 2017

உள்ளத்தில் நேசம் கொள்… வெளியே போராடு…

உலகமே புகழ்ந்து போற்றிப்பாடிடும்..
உச்சியில் பொதிந்து மின்னும் கல்லிடம்…
உனக்குத் தேவையில்லை பொறாமை…

நீ… கண்ணுக்குத் தெரியாத அடிக்கல்லாக இரு..
உயர்ந்து பரந்து விரிந்த கட்டிடம்…
உன் மார்பினில் எழும்பி நிற்கட்டும்…
துன்பம் சுமப்பதிலேதான் உண்மை இன்பம்…

இதயத்திலே மென்மையைப் போற்று…
வேளை வந்தால் முரட்டுத்தனம் காட்டு…

அநீதியைக் கண்டால் சீறு…
நீதிக்கு சிரம் தாழ்த்து…
உள்ளத்தில் நேசம் கொள்…
வெளியே போராடு…
 --------------------------------------------------------------------------------------
   பகத்சிங்கின் தோழர். ராம்சரண்தாஸ் எழுதிய     கனவு தேசம் 
என்ற கவிதைத்தொகுப்பிற்கு     பகத்சிங் சிறையில் 
இருந்தே எழுதிய     முன்னுரையிலிருந்து…

No comments:

Post a Comment