Wednesday, 8 March 2017

NFTE
காரைக்குடி மாவட்டச்செயற்குழு முடிவுகள்

வணிகப்பகுதி இணைப்பு

ஏறத்தாழ 150000க்கும்  அதிகமாக  
தொலைபேசி இணைப்புக்கள் இருந்த.. 
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம் 
இன்று கட்டெறும்பாகி 
30000 தொலைபேசி இணைப்புக்கள் 
என்ற நிலையிலே 
தொடர்ந்து தேய்ந்து வருகிறது. 
பெரும்பகுதி தொலைபேசி நிலையங்களில்
இணைப்புக்கள் இரண்டு இலக்கத்தில் உள்ளன.
வளர்ச்சி  நின்று விட்டது…
வறட்சி வளர்ந்து நிற்கிறது….

காரைக்குடி மாவட்டத்திற்கென 
தனித்த பொதுமேலாளர் மற்றும்
துணைப்பொதுமேலாளர்(நிதி) இல்லை...
நிலையான நிர்வாகம் இல்லாத நிலையில்…
நித்தமும் மாவட்டம் நொடித்து  வருகிறது..
கைவிடப்பட்ட காரைக்குடி மாவட்டத்தை…
ஏற்கனவே எடுக்கப்பட்ட நிர்வாக முடிவின்படி..

உடனடியாக 
மதுரை வணிகப்பகுதியுடன் இணைத்திட
தமிழ் மாநில நிர்வாகத்தை 
செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

காலத்தே முடிவு செய்தால்
காப்பாற்றலாம்.. காரைக்குடியை…

No comments:

Post a Comment