Thursday, 9 March 2017

போரடித்த மண்ணு… மாரடிக்குதம்மா…
நெடுவாசல் போராட்டத்தில் உயிர் நீத்த பொன்னம்மாள் 

மார்ச்...8
உலக மகளிர் தினத்தன்று…
கலர்...கலர்...சேலையில்…
பெண்கள் கவலை மறந்திருக்க…

நெடுவாசலிலோ…
பெண்கள்… கோபம் கொண்டு
ஆவேசம் கொண்டு
ஆள்வோருக்கு எதிராக
மாரடிக்கும் போராட்டம் நடத்திட…

மாரடித்து… மாரடித்து…நெஞ்சடைத்த
நெடுவாசல் நல்லாண்டார் கொல்லை
பொன்னம்மாள்… மரணம் அடைந்துள்ளார்…

யானை கட்டிப்போரடித்த மண்ணிலே…
மண்ணைக் காக்க... மாரடித்து.. மாரடித்து…
போராட்டக்களத்தில் இன்னுயிர் நீத்துள்ளார்...

போராட்டக்களம் அருகே...
அரசுப்பள்ளியில் தேர்வுகள் தொடங்கி விட்டதால்…
நெடுவாசல் போராட்டம்…
தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது….

ஆள்வோர்கள் நெடுவாசல் மக்களின்
உணர்வுகளை மதிக்காவிடில்…

நெடுவாசல் நாடியம்மன் கோவில் முன்பு
மக்களின் நாடி நரம்புகள்
மீண்டும் புடைக்கும்…

22 நாட்கள் இடைவிடாமல் போராடிய
நெடுவாசல் மக்களுக்கு நமது வாழ்த்துக்கள்…

இன்னுயிர் நீத்த பொன்னம்மாள் அவர்களுக்கு..
நமது இதயங்கசிந்த அஞ்சலி…

No comments:

Post a Comment