எங்களுக்கு வெல்லம்
NFTEயும்… உயிரும்..
இன்று
04/03/2017 சேலத்தில் நடைபெறும்
NFTE மாநிலச்செயற்குழுவில் காரைக்குடி மாவட்டச்சங்கம்
பங்கேற்க இயலவில்லை என்பதைக் கனத்த
இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
கூட்டுறவு சங்கத்தின்
கையாளான
காமராஜ் நடத்தும் மாநிலச்செயற்குழு
எந்தவிதப்பிரச்சினையையும் சந்திக்காமல்
ஏகபோகமாக நடக்க வேண்டும் என்று
திட்டமிட்ட தோழர்.ஆர்.கே.,
சேலத்தில் ஏதேனும் எதிர்க்கருத்துக்கள் தெரிவித்தால்
காரைக்குடி ஆட்கள் மீது வன்முறை
கட்டவிழ்த்து விடப்படும் என கொக்கரித்துள்ளார்.
தோழர்கள் கடலூர் ஸ்ரீதர், குடந்தை விஜய்...
சேலம் பாலகுமார் ஆகியோர்
காரைக்குடி ஆட்களைக் கொலை செய்யும்
அளவிற்குத் துணிந்து விட்டனர்
என்றும்...
தன்னால்தான் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றும்..
தோழர்.ஆர்.கே., எக்காளமிட்டுள்ளார்.
ஆனால் ஸ்ரீதர், விஜய் போன்ற தோழர்கள்
அவ்வாறெல்லாம்
தாங்கள் சொல்லவில்லையென்றும்,
NFTEயில் இன்று நடக்கும் நிலை கண்டு
தங்களின் மனம் வேதனை
கொண்டுள்ளதாகவும்..
காரைக்குடி தோழர்களிடம் குறிப்பிட்டுள்ளனர்.
தாவூத் இப்ராஹிம்…
தம்பியாகிய தோழர்
ஆர்.கே.,
தாத்தா ஆகி..
தள்ளாடும் வயதிலும்..
தாதா வேலையை...
தவறாமல் செய்ய
முற்பட்டுள்ளார்..
காரைக்குடித் தோழர்கள்
செயற்குழுவில் கலந்து கொண்டு
தங்களது அரிய இன்னுயிரை
இழந்தாலும்…
அவர்களது மனைவி
மக்கள்
தோழர். குப்தா
பெற்றுத்தந்த
குடும்ப ஓய்வூதியத்தைக்
கொண்டு
பிழைத்துக்கொள்வார்கள்...
ஆனால்..
NFTE இயக்கத்தை
ஆண்டாண்டு காலமாக..
தோள்களிலும், இதயங்களிலும்
தாங்கி வந்த
காரைக்குடித் தோழர்களால்..
NFTE இயக்கத்திற்கு
இடைஞ்சல் வந்தது
என்ற
பழிச்சொல்லை ஏற்க மனமில்லை…
வேலூர் மாநாட்டில்..
கூட்டுறவு சங்கத்தின் கையாளான காமராஜ்...
மாநிலச்செயலர்
இல்லை என்பது தெளிவானவுடன்..
அடுத்த கட்ட நடவடிக்கையாக
எதிலும் இறங்காமல்...
அமைதியுடன் வேலூரிலிருந்து
வீடு திரும்பினோம் என்பதையும்
நாங்கள் நினைவு
படுத்த விரும்புகிறோம்…
மேற்கண்ட காரணங்களால்
காரைக்குடித் தோழர்கள் சேலம் செயற்குழுவில்
கலந்து கொள்ள இயலவில்லை என்பதை
வருத்தத்துடன்
பகிர்ந்து கொள்கிறோம்…
உயிர் எங்களுக்கு
வெல்லம்….
அதை விட NFTE இயக்கம்…
No comments:
Post a Comment