வாடிக்கையாளர் சேவை மையங்கள்
விருப்ப ஓய்வுக்குப்பின் வாடிக்கையாளர்
சேவை மையங்களை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி தமிழ் மாநில நிர்வாகம்
18/12/2019 அன்று வழிகாட்டும் கடிதம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 305 வாடிக்கையாளர்
சேவை மையங்களில் பணம் மற்றும் காசோலை பெறப்படுகின்றது. இதில் 68 மையங்களில் நாளொன்றுக்கு சராசரியாக 50,000/= ரூபாயும்
மாதம் ரூ.10 லட்சத்துக்கும்
அதிகமாகவும்
பணம் வசூல் ஆகிறது. இந்த வாடிக்கையாளர் சேவை மையங்களில் உரிய ஊழியர்களைப்
பணியமர்த்தி வாடிக்கையாளர்
சேவையைத் திறம்பட செய்திடல் வேண்டும்.
ஏறத்தாழ 50 சேவை மையங்களில்
மாதம்
2 லட்சத்துக்கும் குறைவாக வசூல் ஆகிறது.
மேலும் ஜனவரி 2020க்குப்பின் போதிய ஊழியர்கள்
பணியில்
இருக்க மாட்டார்கள். எனவே மேற்கண்ட மையங்களில் DSA எனப்படும் நேரடி விற்பனைப்பிரதிநிதிகள்
வசம் பணம் வசூல் செய்யும் பணியை ஒப்படைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
மதுரை வணிகப்பகுதியில்
தொடர்ந்து
நடத்தப்படவுள்ள சேவைமையங்கள்
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலக
CSC
மதுரைப் பொதுமேலாளர் அலுவலக CSC
மதுரை தல்லாகுளம் CSC
மதுரை கீழமாசித்தெரு CSC
திண்டுக்கல் மற்றும் தேனி CSC
மதுரை வணிகப்பகுதியில்
தொடர்ந்து
செயல்பட வாய்ப்பு இல்லாத சேவை மையங்கள்
காரைக்குடி
சிங்கம்புணரி, திருவாடானை, முதுகுளத்தூர்
மற்றும் மானாமதுரை
மதுரை
கோம்பை, சின்னமனூர், நிலக்கோட்டை,
நத்தம்,
சோழவந்தான் மற்றும் ஆண்டிப்பட்டி
மேற்கண்ட இரண்டு வகை சேவைமையங்கள்
தவிர ஏனைய பகுதிகளில் விருப்ப ஓய்வுக்குப்பின் பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை
மற்றும் தேவையைப் பொறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
தோழர்களே...
வாடிக்கையாளர் சேவைமையங்கள்
நமது
சேவையின் இதயப்பகுதிகளாகும்.
எனவே முதன்மை CATEGORYயில் இருக்கும் சேவைமையங்களை
நாம்
எப்பாடுபட்டாவது தொடர்ந்து நடத்திட வேண்டும்.
கிராமப்புறத்தில் இருக்கும் ஊழியரைக்கூட
நகர்ப்புற வாடிக்கையாளர் சேவைமையத்தில் பணிபுரிந்திட தயார்ப்படுத்திட வேண்டும். மூடப்படும்
நிலையில் உள்ள சேவை மையப்பகுதிகளில் உள்ள
நமது ஓய்வு பெற்ற தோழர்கள் DSA
நேரடி விற்பனைப்பிரதிநிதிகளாக களமிறங்கி செயல்படலாம்.
கடந்த காலங்களில் தபால் அலுவலகம் மற்றும்
வங்கிகள் மூலமாக தொலைபேசி பில்கள்
வசூல் செய்யப்பட்டன.
மீண்டும் அந்த சேவையைத் தொடரலாம்.
தற்போது நாடெங்கும்...
CSC –
COMMON SERVICE CENTRE எனப்படும்
பொதுசேவை மையங்கள் செயல்படுகின்றன.
ஓய்வு பெற்ற ஊழியர்கள்
தங்களது LIFE CERTIFICATE – உயிர்ச்சான்றிதழை CSC மூலம் தாக்கல் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய CSCக்கள் மூலமாகவும்
நமது வாடிக்கையாளர் சேவையை நாம் தொடர முடியும்.
ஆட்கள் குறைந்தாலும்...
நமது அரும்பணி
குறையாமல்
வாடிக்கையாளர் சேவைமையங்களில்
நிறைவாகப் பணி செய்வோம்.
BSNL நிறுவனத்தை
முதன்மைப்படுத்துவோம்...
முன்னிலைப்படுத்துவோம்...
No comments:
Post a Comment