Wednesday 18 December 2019


செ ய் தி க ள்

சிறு சிறு வட்டங்கள் இணைப்பு

BSNL மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு அங்கமாக
 சிறு சிறு வட்டங்கள் CIRCLES அந்தந்த 
மாநில நிர்வாகங்களுடன் இணைக்கப்படுகின்றன.

ஜபல்பூர் BRBRAIT பயிற்சி மையம்
மத்தியப்பிரதேசத்துடன் இணைக்கப்படுகிறது.
NATFM பயிற்சி மையம் 
தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்கப்படுகிறது.
மும்பை TELECOM FACTORY 
மகராஷ்டிராவுடன் இணைக்கப்படுகிறது.
கொல்கத்தா TELECOM FACTORY 
மேற்கு வங்கத்துடன் இணைக்கப்படுகிறது.
ஜபல்பூர் TELECOM FACTORY 
மத்தியப்பிரதேசத்துடன் இணைக்கப்படுகிறது.
PROJECT வட்டங்கள் அந்தந்த 
பராமரிப்பு வட்டங்களுடன் இணைக்கப்படுகிறது.
--------------------------------------------
மீண்டும் DELOITTE 

விருப்ப ஓய்வுக்குப்பின் BSNL நிறுவனத்தையும் நிர்வாகத்தையும் நடத்துவது பற்றி ஆலோசனை வழங்குவதற்காக 
DELOITTE ஆலோசனை நிறுவனத்தை BSNL நிர்வாகம் அணுகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நிர்வாகத்திடம் போதிய சரக்கு இல்லை என்பதையே இது காட்டுகின்றது. சென்ற முறை DELOITTE குழுவின் பரிந்துரைகள் ஊழியர் விரோதமாகவே இருந்தன என்பதும், 
DELOITTE நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்கள்
 எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
விழியற்றவனிடம் செவியற்றவன் வழி கேட்ட கதைதான்...
--------------------------------------------
வைப்புநிதி பிடித்தம் நிறுத்தம்

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தோரின் GPF வைப்புநிதிப் பிடித்தம் நவம்பர் மாதத்துடன் நிறுத்தப்படுகின்றது. 
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் GPF  பிடித்தம் கிடையாது.
 --------------------------------------------
விடுப்புச்சம்பளம் மற்றும் பணிக்கொடை

விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்களின் விடுப்புச்சம்பளம் 
LEAVE ENCASHMENT  மற்றும் VRSக்கு விண்ணப்பித்த BSNL நேரடி ஊழியர்களின் GRATUITY பணிக்கொடை ஆகியவற்றிற்கு ஆகும் மொத்தச்செலவு பற்றி கணக்கிட மாநில நிர்வாகங்களுக்கு CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. இதன் மூலம் விடுப்புச்சம்பளம் கிடைக்காது... பணமில்லை என்று நான்காவது கண்ணான சந்தேகக்கண் கொண்டு பார்த்தவர்களின் வாய் அடைக்கப்பட்டுவிட்டது.
 --------------------------------------------
வழக்கு நிலுவையில் உள்ள VRS  விரும்பிகள்

தனிப்பட்ட முறையில் வழக்கில் சிக்கி வழக்கு முடிவடையாத ஊழியர்களும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என BSNL நிர்வாகம் அறிவித்ததன் அடிப்படையில் வழக்கைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தோழர்களும் VRSக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அத்தகைய தோழர்களுக்கு VIGILANCE CLEARANCE வழங்கப்படாது என நிர்வாகம் கடிதம் வெளியிட்டுள்ளது. இது முந்தைய முடிவிற்கு எதிரானது. மேலும் தனிநபர் வழக்குகளில் சம்பந்தப்பட்டு PROVISIONAL  PENSION  தற்காலிக ஓய்வூதியம் பெறுவோரின் கணக்கை முறைப்படுத்தி  ஓய்வூதியப்பலன்களை முழுமையாக அளிக்கலாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் BSNL VIGILANCE  பிரிவு இவ்வாறு 
அறிவிப்பு வெளியிட்டுள்ளது பொருத்தமற்றது.
--------------------------------------------
தமிழ் மாநில செயற்குழு

NFTE  தமிழ்மாநில செயற்குழு 03/01/2020 அன்று சென்னை தலைமைப் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள 
NFTE சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
--------------------------------------------
நவம்பர் மாதச்சம்பளம்

நவம்பர் மாதச்சம்பளம் பற்றி வழக்கம்போல் பல்வேறு வதந்திகள் உலா வந்தன. இருக்கின்ற கையிருப்பைக் கொண்டு சம்பளம் வழங்குவதா அல்லது விருப்ப ஓய்வில் செல்வோரின் வங்கிக்கடன், சொசைட்டிக்கடன், வைப்புநிதி ஆகியவற்றைப் பட்டுவாடா செய்வதா என்ற மனக்குழப்பத்தில் நிர்வாகம் உள்ளதாகத் தெரிகிறது. நிரந்தர ஊழியர்களுக்கு இப்போதைக்கு சம்பளம் தராவிட்டாலும் பரவாயில்லை.... நித்தம் நித்தம் செத்துக்கொண்டிருக்கும் 
ஓப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்கினால் போதும்...
--------------------------------------------
மதுரைப் பகுதி தரும் மனவேதனைகள்

காரைக்குடி மாவட்டத்தில் 205 தோழர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். மதுரைப்பகுதியையும் சேர்த்து ஏறத்தாழ 760 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். அதிகமான எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு காரைக்குடிப் பகுதிக்கு தனியாக ஓய்வூதியக்குழு அமைக்க வேண்டும் என பலமுறை மதுரை நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை. ஓய்வூதிய விண்ணப்பம் சமர்ப்பிக்க மதுரை வரும் காரைக்குடி தோழர்கள் அங்குள்ள எழுத்தர்களால் மிகவும் அவமரியாதையாக நடத்தப்படுகின்றார்கள். பல மைல் தூரத்தில் இருந்து வரும் தோழர்கள் ஒரு ஜெராக்ஸ் பிரதி குறைவாக கொண்டு வந்தால் கூட  திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். இது பற்றி  நிர்வாகத்திடம் எடுத்துச்சொல்லியும் வழக்கம் போல் பலனில்லை. அரைகுறையான விதிமுறைகளும் நடைமுறைகளும் ஓய்வூதியப்பிரிவில் அரங்கேற்றப்படுகின்றன. எனவே மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு நமது மாநிலச்சங்கம் இப்பிரச்சினையைக் கொண்டு சென்றுள்ளது. காரைக்குடிப் பகுதிக்கு தனி ஓய்வூதியப்பிரிவு மதுரையில் அமைக்கப்பட வேண்டும். இதுவே ஒட்டுமொத்த காரைக்குடி ஊழியர்களின் கோரிக்கை. மாநில நிர்வாகம்
உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றோம்.

No comments:

Post a Comment