BSNL புத்தாக்கத்திட்டங்களை விரைவுபடுத்தவும்,
வழிகாட்டவும் மந்திரிகள் குழு
அமைக்கப்பட்டுள்ளதாக
பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா
நிதியமைச்சர் திருமதி. நிர்மலா
சீத்தாராமன்
தொலைத்தொடர்பு அமைச்சர் திரு.இரவி
சங்கர் பிரசாத்
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.இராஜ்நாத் சிங்
வணிகமந்திரி திரு.பியூஷ் கோயல்
எண்ணெய்வள அமைச்சர் திரு.தர்மேந்திர
பிரதான்
ஆகியோர் குழு உறுப்பினர்களாவார்கள்.
69000 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டமிடப்பட்டுள்ள
BSNL மற்றும் MTNL புத்தாக்கம்..
BSNL மற்றும் MTNL இணைப்பு...
4G அலைக்கற்றை ஒதுக்கீடு...
வரும் மூன்று ஆண்டுகளில் 37500
கோடி அளவிற்கு
BSNL நிலங்களை விற்று காசாக்குதல்...
போன்ற முக்கிய பிரச்சினைகளை
அமைச்சர்கள்
குழு கையாளும் என கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 92700 ஊழியர்கள்
வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
அடுத்த கட்டமாக 4G அலைக்கற்றை
ஒதுக்கீடு செய்யப்படும்.
அதன்பின் BSNL சொத்துக்கள் விற்பனை
நடைபெறும்.
கடைசியாக BSNL விற்பனை நடைபெறுமா?
என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment