Tuesday, 3 December 2019


விறு விறு... விருப்ப ஓய்வு...
கடந்த ஒருமாத காலமாக BSNL மற்றும் MTNL நிறுவனங்களைக் கலக்கிய VRS புயல் நேற்று மாலையோடு கரையைக் கடந்துள்ளது.
BSNL மற்றும் MTNL சேர்த்து ஏறத்தாழ  93,000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் விருப்ப ஓய்வுக்கு விருப்பம் கொடுத்துள்ளனர். 
இது நிர்வாகம் நிச்சயித்த இலக்கை விட கூடுதலாகும்.

MTNL நிறுவனத்தில் நிச்சயிக்கப்பட்ட இலக்கான 13,650ஐத் தாண்டி 14400 ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 
தற்போது 4430 ஊழியர்கள் மட்டுமே மிச்சமுள்ளனர். 
MTNL நிறுவனப் பணிகளுக்கு தற்போது மிச்சமுள்ள ஊழியர்களே போதுமானது என்று அதன் CMD கருத்து தெரிவித்துள்ளார். 
முந்தைய சம்பளச்செலவான 2272 கோடி தற்போது 500 கோடியாகக்குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BSNL நிறுவனத்தில் 78,569 ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதுவும் நிச்சயிக்கப்பட்ட இலக்கை விடக் கூடுதலாகும். சம்பளச்செலவு 14,000 கோடியில் இருந்து 7,000 கோடியாகப் பாதியாகக்குறையும் என BSNL CMD கூறியுள்ளார்.

BSNL நிறுவனத்தில் அதிகபட்சமாக 
மகாராஷ்டிரா மாநிலத்தில் 8544 பேரும், 
குஜராத் மாநிலத்தில் 6467 பேரும், 
கர்நாடகாவில் 6163 பேரும் விருப்ப ஓய்வில் செல்கின்றனர்.
ஆந்திரா, தெலுங்கானா சேர்த்து ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் ஏறத்தாழ 10,000 பேர் விருப்ப ஓய்வில் செல்வது குறிப்பிடத்தக்கது.

கல்கத்தா – 1758... சென்னை – 2671... 
பெங்களூரு – 2037... ஹைதராபாத் – 2619
என பெருநகரங்களில் அதிக எண்ணிக்கையில் விருப்ப ஓய்வு உள்ளது.

தமிழகத்தில் 5308 பேர் விருப்ப ஓய்வில் செல்கின்றனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 564 பேரும்...
மதுரையில் 555 பேரும் விருப்ப ஓய்வில் செல்கின்றனர்.
வஞ்சிக்கப்பட்ட பகுதியான காரைக்குடியில் 
205 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 
இது 80 சதமாகும். 
பொருளாதாரம் என்ற ஒற்றைச்சொல் 
மட்டுமே இதனை முடிவு செய்துள்ளது.

நிச்சயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக ஊழியர்கள் விருப்பம் தெரிவித்திருந்தாலும் அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஊழியர்கள்.... அதிக சம்பளம்... 
என்ற கூக்குரலுக்கு இனி இடமில்லை.
சுமையென சொல்லப்பட்டது குறைந்து விட்டது....
இனிமேல்தான் சவால்கள் காத்திருக்கின்றன....

BSNLன் நிதிச்சுமையைக் குறைக்க 
விருப்ப ஓய்விற்கு விருப்பம் அளித்து
விடை பெற்றுச்செல்லும் அதிகாரிகளை...
ஊழியர்களை மனதாரப் பாராட்டுவோம்.
அவர்கள் விட்டுச்செல்லும் பணியை
விடாமல் மேற்கொள்வோம் என்று உறுதியேற்போம்.

No comments:

Post a Comment