அருட்கொடை - விடுப்புச்சம்பளப் பட்டுவாடா
விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு
EX-GRATIA அருட்கொடை
மற்றும் LEAVE ENCASHMENT விடுப்புச்சம்பளம் ஆகியவற்றைப் பட்டுவாடா
செய்வதற்கான தேதியை நிர்ணயம் செய்து
CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
LEAVE ENCASHMENT விடுப்புச்சம்பளம்
LEAVE ENCASHMENT SANCTION –
விடுப்புச்சம்பள அனுமதி உத்திரவு
வெளியிடும் தேதி – 07/02/2020
விடுப்புச்சம்பளப் பட்டுவாடா தேதி
– 15/02/2020
EX-GRATIA – அருட்கொடை
EX-GRATIA SANCTION
அருட்கொடை அனுமதி உத்திரவு வெளியிடும்
தேதி – 14/02/2020
அருட்கொடை முதல் தவணை பட்டுவாடா
தேதி – 31/03/2020
அனுமதி உத்திரவு
வெளியிடும் தேதி – 15/02/2020
பணிக்கொடை பட்டுவாடா தேதி –
31/03/2020
தோழர்களே...
நிர்வாகம் விருப்ப ஓய்வு அறிவிப்பில்
குறிப்பிட்டதைப் போல
அருட்கொடை, பணிக்கொடை மற்றும்
விடுப்புச்சம்பளம் ஆகியவற்றிற்கான பட்டுவாடா தேதிகளை அறிவித்துள்ளது.
விருப்ப
ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கு
இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாகும்.
இந்த மகிழ்ச்சியினூடே...
நவம்பர் மாதம், டிசம்பர் மாதம்
மற்றும் ஜனவரி மாத
சம்பளங்கள் எப்போது கிடைக்கும்? என்ற
ஊழியர்களின் கவலைமிகு கேள்வியும்
கேட்கின்றது.
இன்றைய நிலையில்...
BSNL நிறுவனத்தில் சம்பளம் எப்போது?
என்ற நியாயமான கேள்விக்கு...வேதாளத்தைச் சமாளித்த
விக்கிரமாதித்தனாலும்
பதில் சொல்ல முடியாது.
தவறான பதிலைச் சொல்லி அவனது தலைதான்
வெடித்துச்சிதறும்.
எனவே தோழர்கள் தேவையற்றக் கேள்விகளைக் கேட்காமல்
பல்லைக் கடித்துக்கொண்டு வாழப்பழகிக்கொள்வது சாலச்சிறந்தது.
No comments:
Post a Comment