செய்திகள்
இன்று 23/10/2019 டெல்லியில் நடக்கவிருக்கும்
மத்திய மந்திரிசபைக்கூட்டத்தில் BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் புத்தாக்கம் பற்றி
முடிவெடுக்கப்படலாம் என பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகியுள்ளன. புத்தாக்கம் என்ற
பெயரில் ஊழியர்களை வெளியேற்றுவது ஒன்றே முக்கிய முடிவாக அமையும்.
எதனையும் பொறுத்திருந்து
பார்ப்போம்.
இன்று 23/10/2019 BSNL ஊழியர்களுக்கு
செப்டம்பர் மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏழெட்டு மாதங்களாக சம்பளமின்றி
தவிக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக குறைந்தபட்சம் 3 மாத சம்பளத்தை
வழங்க வேண்டும் என தொழிலாளர் ஆணையர் உத்திரவிட்டிருந்தார். அதனடிப்படையில் தமிழகத்திற்கு
56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என CORPORATE நிர்வாகத்திடம் கோரிக்கை
வைத்துள்ளதாக தமிழ் மாநில நிர்வாகம் தனது 22/10/2019 தேதியிட்ட கடிதத்தில் கூறியுள்ளது.
எனவே மாவட்ட வாரியாக தேங்கியுள்ள ஒப்பந்த தொழிலாளரின் சம்பளபாக்கி விவரம் கேட்கபட்டுள்ளது.
அதே நேரம் ஒப்பந்த தொழிலாளரின் சம்பளத்திற்கான
செலவில் 50 சதம் குறைக்கப்பட வேண்டும்
என்ற
அணுகுண்டையும் தமிழ்மாநில நிர்வாகம் போட்டுள்ளது.
தமிழகத்தில் 706 தோழர்களுக்கு
CONFIRMATION எனப்படும்
பதவி நிரந்தர விவரம் ERPயில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என
தமிழ்மாநில நிர்வாகம் 22/10/2019 அன்று வெளியிட்ட கடிதத்தில் கூறியுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள்
15 தினங்களுக்குள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காரைக்குடியில் மட்டும் 81 தோழர்களுக்கு பதவி நிரந்தர உத்திரவு விடுபட்டுள்ளது. ஊழியர்
விவரங்களை HRMSல் இருந்து ERPக்கு மாற்றம் செய்யும்போது சரிவர செய்யவில்லை என்பது தெரியவருகின்றது. விடுபட்ட
தோழர்களில் DOT மற்றும் BSNL நியமன ஊழியர்களும் அதிகாரிகளும், கருணை அடிப்படையில் பணிநியமனம்
பெற்றவர்களும் அடக்கம். விருப்ப ஓய்வு யானை வரப்போவதை, சேவைக்குறிப்பேடு சரிபார்த்தல்,
CONFIRMATION உறுதி செய்தல் போன்ற மணியோசை மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment