INDIA NEED BSNL
நீண்ட போராட்டத்திற்குப்
பின்
மத்திய அமைச்சரவை
23/10/2019 அன்று
BSNL மற்றும்
MTNL நிறுவனங்களின்
புத்தாக்கத் திட்டத்திற்கு
ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய தேசத்தின்
மாபெரும் மக்கள் சொத்தாகிய
BSNL நிறுவனத்திற்கு
வழி பிறந்துள்ளது. ஒளி பிறந்துள்ளது.
“BSNL AND
MTNL ARE STRATEGIC ASSETS OF INDIA”
BSNL மற்றும்
MTNL இந்திய தேசத்தின்
பெருமைமிகு பழமைமிகு
சொத்துக்கள்”
என்று பெருமிதத்தோடு
அமைச்சரவைக்கூட்ட
முடிவிற்குப்பின்
குறிப்பிட்ட
மத்திய அமைச்சர்
திரு.ரவிசங்கர் பிரசாத்
அவர்களை மனதாரப் பாராட்டுகின்றோம்.
மேலும்..
எக்காரணத்தை முன்னிட்டும்
BSNL மற்றும்
MTNL மூடப்படாது எனவும்...
பங்குவிற்பனை செய்யப்படாது
எனவும்...
தனியார்மயப்படுத்தப்படாது
எனவும்...
உறுதியுடன் தனது
உரையில் அவர் தெரிவித்தது
மனம் திறந்து பாராட்ட
வேண்டிய செயலாகும்.
இனி நாம்...
விருப்ப
ஓய்வில் சென்றாலும் பரவாயில்லை...
நாம் வளர்த்த நிறுவனம்...
நம்மை வளர்த்த
நிறுவனம்...
தேசத்தின் சொத்தாக
தலைநிமிர்ந்து நிற்கின்றது...
என்ற பெருமையில்
நாம் காலம் முழுவதும் மகிழ்வு கொள்ளலாம்...
நிதி அமைச்சகத்தின்
உதவியற்ற நிலையைப் புறந்தள்ளி...
உறுதியோடு புத்தாக்கத்திட்டத்திற்கு
ஒப்புதல் அளித்த
மத்திய அரசிற்கு
நமது நன்றிகளும்... வாழ்த்துக்களும்...
நல்லாட்சி
நாயகன் என்று BJPயால் புகழப்படும்
அமரர் வாஜ்பாய் காலத்தில்...
BJP அரசின் கொள்கை
முடிவால்
உருவாக்கப்பட்ட பொதுத்துறை BSNL...
எங்கே இதனைக் கொன்று
புதைத்து விடுவார்களோ
என்ற அச்சம் மனதில்
ஆழமாகப் பதிந்திருந்தது...
ஆனால் தங்களால்
உருவாக்கப்பட்ட பொதுத்துறையை...
தொடர்ந்து பொதுத்துறையாகவே
காப்போம் என்ற முடிவு
வரலாற்றில் எழுதப்பட
வேண்டிய ஒன்றாகும்...
அமைச்சரைவையின்
ஐந்து முடிவுகள்...
BSNL மற்றும்
MTNL நிறுவனங்களுக்கு உடனடியாக 4G அலைக்கற்றை வழங்கப்படுகின்றது. செலவுத்தொகை ரூ.20,140/-கோடி அரசின் நிதியில் இருந்து ஒதுக்கப்படுகின்றது.
GST வரித்தொகையான ரூ.3674/= கோடியும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படும். 4G அலைக்கற்றை ஒதுக்கீடு
மூலம் BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் களத்தில் போட்டியாளர்களைச் சந்திக்க முடியும்.
கிராமப்புற பகுதிகள் உள்ளிட்டு தேசம் முழுமையும் தரமான சேவையைத் தரமுடியும்.
------------------------------------------
நிர்வாகச்செலவுகளுக்காகவும், முதலீட்டுச்செலவுகளுக்காகவும்
தங்களது பழைய கடன்களைத் தீர்த்துக்கொள்வதற்கும் ரூ.15,000/- கோடியளவில் மத்திய அரசின்
உத்திரவாதம் பெற்ற நீண்டகால பத்திரங்கள் மூலம் நிதி திரட்டிக்கொள்ளலாம்.
------------------------------------------
நிர்வாகச்செலவுகளைக் குறைப்பதற்காக 50 வயதிற்கு
மேற்பட்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத்திட்டத்தைத் தயாரித்து அறிவிக்கலாம். இதற்காக
ஆகும் செலவினமான ரூ.17,169 கோடியையும் ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் COMMUTATION போன்ற
செலவினங்களையும் அரசு ஏற்றுக்கொள்ளும். விருப்ப
ஓய்வுத்திட்ட அம்சங்களும், நடைமுறைகளும் மேற்கண்ட நிறுவனங்களால் முடிவு செய்யப்படும்.
தங்களது வளர்ச்சிப்பணிகளுக்கான செலவுகள்
மற்றும் ஊழியர் ஓய்வுக்கால செலவுகளுக்காக BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் தங்களது அசையாச்சொத்துக்களை பணமாக்கிக்கொள்ளலாம்.
BSNL மற்றும்
MTNL நிறுவனங்கள் இணைப்பு
கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
மேற்கண்ட புத்தாக்கத்
திட்டத்தின் மூலம் BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் தரமான நம்பகமான தங்களது சேவையை
தேசம்
முழுவதும்... தேசத்தின் மூலைமுடுக்குகள்
தோறும் வழங்கிட வகை செய்யப்படுகின்றது.
தோழர்களே..
BSNL ஊழியர்கள் விருப்ப ஓய்வுத்திட்டத்தின் சாரங்கள் என்ன
என்பதை அறிந்திட
மிக்க ஆவலாய் உள்ளனர்.
பலர்
கால்குலேட்டரும் கையுமாக அமர்ந்துள்ளனர்.
இதுவரை
விருப்ப ஓய்வு என்பது
பல
துறைகளில் கசப்பான ஒன்றாகவே அமைந்துள்ளது.
நமது துறையில் அது மிகவும் கவர்ச்சிமிக்க
திட்டமாக இருக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இருந்த போதும் திட்டத்தை முழுமைப்படுத்திட
வேண்டிய கடமை BSNL நிர்வாகத்திடமே உள்ளது.
எனவே இதுபற்றி
விவாதிக்க
இன்று 24/10/2019 மாலை 4.00 மணியளவில்
அனைத்து சங்க கூட்டம்
கூட்டப்பட்டுள்ளது.
கூட்ட முடிவில் திட்ட
அம்சங்கள் வெளியாகும்.
விருப்ப ஓய்வைப் பொறுத்தவரை
NFTE இயக்கம் அதனை எதிர்க்கவில்லை.
ஆனால்
அது ஊழியருக்குப் பலன்
அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
சாதகங்கள் ஏதுமின்றி பாதகங்கள் உண்டானால்
NFTE அதனைக் கடுமையாக எதிர்கொள்ளும்...
NFTE அதனைக் கடுமையாக எதிர்கொள்ளும்...
ஊழியர் நலன் காக்க எதிர்த்துப் போராடும்...
இதுவே நமது நிலை....
No comments:
Post a Comment