ஒப்பந்த ஊழியர் பிரச்சினை....
ஓரடி முன்னால்...
19/10/2019 அன்று சென்னையில் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் தீர்விற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை
நடைபெற்றது.
NFTE சார்பாகத் தோழர்கள். காமராஜ், நடராஜன்,
செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக நிர்வாகத்தரப்பு சார்பாகவும்
சென்னை நிர்வாகத்தரப்பு சார்பாகவும்
GM,DGM, மற்றும்
AGM அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன...
ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்சம்
மூன்று மாத சம்பளம் தீபாவளிக்கு முன்பாக வழங்கப்பட
வேண்டும்.
ஒப்பந்த ஊழியருக்கான சம்பளம் மற்றும் இதர
உரிமைகளை அளிக்காமல் வேலையில் இருந்து அவர்களை நீக்குதல் முடியாது.
எனவே முதற்கட்டமாக சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆட்குறைப்பு என்பதை இப்போதைக்கு நிர்வாகம்
அமுல்படுத்த இயலாது.
அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை 13/11/2019 அன்று
சென்னையில் நடைபெறும். அந்தக்கூட்டத்திற்கு டெல்லி தலைமையகத்திலிருந்து அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும்.
தோழர்களே...
அடுக்கி வைத்த மூட்டையில் அடிமூட்டை எனப்படும்
ஒப்பந்த ஊழியர்களின் நிலை மோசமான நிலையில்
இருந்து...
மிகமோசமான நிலைக்கு சமீபகாலமாகத் தள்ளப்பட்டுள்ளது.
பலகட்டப்போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்குப்பின்
தற்போது நடந்த பேச்சுவார்த்தையின் மூலம்
ஒப்பந்த ஊழியர்களுக்கான தீர்வுப்பாதையில்
நாம் ஓரடி முன்னால் சென்றுள்ளோம் என்றே சொல்ல
வேண்டும்...
மேலும் தீர்விற்கும் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து நாம்
உறுதியுடனும் முனைப்புடனும் இயங்க வேண்டும்.
No comments:
Post a Comment