செ ய் தி க ள்
நிதி ஒதுக்கீடு
நவம்பர் 2019 மாத வங்கிக்கடன் பிடித்தம், மின்கட்டணம்
மற்றும்
விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கான பரிசுப்பொருள் ஆகியவற்றுக்கான நிதி
மாநில அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாவட்டங்களுக்கு
நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
-----------------------------------------
GPF
வைப்புநிதி
விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களின் GPF வைப்புநிதி முழுமையாக DOTக்கு செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தாமதமாக செலுத்தியமைக்கான அபராத வட்டி செலுத்தப்படவில்லை. இருப்பினும் ஊழியர்களின்
GPF உரிய வட்டியுடன் பட்டுவாடா செய்யப்படும் என்று நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
-----------------------------------------
ஓய்வூதியப்பங்களிப்பு
விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களின் ஓய்வூதியப்பங்களிப்பு
PENSION CONTRIBUTION இன்னும் DOTக்கு செலுத்தப்படாத நிலையில் ஓய்வூதியம் தாமதமாகும்
சூழல் ஏற்பட்டுள்ளது. நமது சங்கம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. ஓய்வூதியப்பங்களிப்பு
செலுத்தவதில் தாமதம் ஏற்பட்டாலும் கூட ஓய்வூதியப் பட்டுவாடாவில் தாமதம் ஏற்படாது என
நிர்வாகம் நமது சங்கத்திடம் உறுதி அளித்துள்ளது.
-----------------------------------------
சம்பளப்பட்டுவாடா
BSNL எதிர்பார்த்துள்ள வங்கிக்கடன் இன்றுவரை
வந்து சேராத காரணத்தால் சம்பளம் பட்டுவாடா செய்வது பற்றி உறுதியளிக்க இயலவில்லை என்று நிர்வாகம் கைவிரித்துள்ளது. ஆனாலும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
கூறியுள்ளது.
ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரண்டு தினங்கள் நாடுதழுவிய வங்கி வேலைநிறுத்தம்
நடைபெறுகின்றது. எனவே நாளை 30/01/2020 சம்பளம் பட்டுவாடா செய்யப்படாவிட்டால்
பிப்ரவரி
3ந்தேதிக்குப் பின்புதான் ஏதேனும் நடைபெறும்.
-----------------------------------------
வங்கிப்பிடித்தம் – அபராத வட்டி
வங்கிக்கடன், கூட்டுறவுக்கடன் மற்றும் ஆயுள்
காப்பீட்டுப் பிடித்தங்கள் சரியான நேரத்தில் செலுத்தப்படாத காரணத்தால் ஊழியர்கள் தண்டமாக
அபராத வட்டி கட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதுபற்றி பலமுறை எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
நேற்றும் நமது சங்கம் இந்தப்பிரச்சினையை நிர்வாகத்திடம் அழுத்தமாக கூறியுள்ளது.
Thanks
ReplyDelete