Sunday 12 January 2020


செ ய் தி க ள்

மின்னணு கோப்புகள்

விருப்ப ஓய்வுக்குப்பின் BSNLலில் தற்போது பராமரிக்கப்படும் கோப்புக்களுக்குப் பதிலாக மின்னணு முறையில்  eFILE Management System என்ற நடைமுறையை அமுல்படுத்த BSNL நிர்வாகம் 
ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு அலுவலகத்திலும் இதை  உபயோகிப்பாளர்களின் விவரங்களை 17/01/2020க்குள் CORPORATE அலுவலகத்திற்கு அனுப்பிட அறிவுறுத்தியுள்ளது. பல ஆயிரம் கோடி செலவில் SAP எனப்படும் மின்னணு முறை அமுலுக்கு வந்தபின்னும் அலுவலகங்களில் பழைய கோப்புக்கள்  வழக்கம்போல்  கையாளப்பட்டு வந்தன. தற்போது காகிதங்களுக்கு 
விடை கொடுக்கப்படவுள்ளது வரவேற்புக்குரியது.
 ---------------------------------------------
வணிகப்பகுதி மறு ஆய்வு

வருமானத்தின் அடிப்படையில் மீண்டும் வணிகப்பகுதி உருவாக்கத்தை மறுபரிசீலனை செய்திட மாநில நிர்வாகங்களை CORPORATE அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் வருமானத்தின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதற்கான வாய்ப்பு இல்லை. இருந்தபோதும் விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் வணிகப்பகுதி இணைப்பில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. விருதுநகர் மதுரையுடனும் நெல்லை தனித்த வணிகப்பகுதியாகவும் செயல்பட வேண்டும் என்பது ஊழியர்களின் எதிர்பார்ப்பு.
 ---------------------------------------------
மாநில அலுவலகத்திற்கு கணக்கு அதிகாரிகள்

பல்வேறு பணிகள் தற்போது மையப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக IOBAS மற்றும் CIRCUIT BILLING பணிகள் மாநில அலுவலகத்தில் மையப்படுத்தப்படவுள்ளது. இந்தப் பகுதியில் பணிபுரிய கணக்கு அதிகாரிகளிடம் விருப்பம் கேட்கப்பட்டுள்ளது.  கணக்கு அதிகாரிகளிடம் கணக்காக விருப்பம் கேட்கும் நிர்வாகங்கள் பாவப்பட்ட போன்மெக்கானிக்குகளிடம் மட்டும் எதையும் கேட்பதில்லை என்பது வருத்தத்திற்குரியது.
 ---------------------------------------------
SAMPANN ஓய்வூதிய மென்பொருள் உபயோகிப்பாளர்கள்

ஓய்வூதியம் சம்பந்தமான SAMPANN மென்பொருளைக் கையாள்வதற்கு ஒவ்வொரு SSA மாவட்டத்திலும் DGM/CAO அதிகாரிகள் மட்டத்தில் உபயோகிப்பாளர் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. 18 SSAக்களில் HoO எனப்படும் உபயோகிப்பாளர்கள் DOTயால் உருவாக்கப்பட்டுள்ளனர். காரைக்குடிக்கு திரு.செந்தில் முருகேசன் CAO அவர்களும் மதுரைக்கு திரு.சந்திரசேகரன் DGM அவர்களும் HoOவாக செயல்படுவார்கள். HoOக்கள் AO/JAO மட்டத்தில் DH எனப்படும் உபயோகிப்பாளர்களை உருவாக்குவார்கள். இந்த நடைமுறைகள் முற்றுப்பெற்ற பின்பு ஓய்வு பெறப்போகின்றவர்களுக்கான உபயோகிப்பாளர் அனுமதி வழங்கப்படும். எல்லாவிதப் பணிகளும் முழுமை அடைந்த பின்பு SAMPANN மென்பொருள் மூலம் ஓய்வூதிய விண்ணப்பங்களை 
நிரப்புவதற்கு DOT பச்சைக்கொடி காட்டும்.
 ---------------------------------------------
ஓய்வூதியப்பங்களிப்பு

டிசம்பர் 2011 முதல் செப்டம்பர் 2014 வரையிலான காலத்திற்கு ஓய்வூதியப்பங்களிப்பை PENSION CONTRIBUTION ஊழியர்களின் சம்பளத்தின் உச்சபட்சத்தில் MAXIMUM கணக்கிட்டு ERPயில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. மேற்கண்ட பணி முடிவடைந்த பின்புதான் 
ஜனவரி மாத சம்பள கணக்கீடு செய்யப்படும்.
 ---------------------------------------------
GPF – வைப்புநிதி

விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கான வைப்புநிதி GPF நவம்பர் 2019 வரை கணக்கிடப்பட்டு DOTக்கு செலுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளன. எனவே விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்கள்
 மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தங்களது
 வைப்புநிதி பட்டுவாடாவை பெறும் சூழல் உள்ளது.

No comments:

Post a Comment