விருப்ப ஓய்வு வழக்கு
விருப்ப ஓய்வுக்குத் தடை கோரி
சென்னை CAT தீர்ப்பாயத்தில்
சில தனிநபர் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கு
24/01/2020 அன்று விசாரணைக்கு வந்தது. டெல்லியில் இருந்து மனிதவள இயக்குநர்
DIRECTOR(HR) சென்னை நீதிமன்றம் வந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் விருப்ப
ஓய்வுக்குத் தடையேதும் இல்லை என்றும் வரும் 26/02/2020 அன்று அடுத்த கட்ட
விசாரணை நடைபெறும்
என்றும் கூறியுள்ளது.
விருப்ப ஓய்வு எந்தவொரு ஊழியரையும்
கட்டாயப்படுத்தவில்லை என்றும்... எந்தவொரு ஊழியரையும் காயப்படுத்தவில்லை என்றும் நீதிமன்றம்
கருத்து தெரிவித்துள்ளது. இடைக்காலத்தடை என்பது பொதுநலனுக்கு இடையூறாக இருக்கும் என்பதால்
இடைக்காலத்தடை ஏதும் விதிக்கவில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனிடையே டெல்லியில்
வரும் 28/01/2020 அன்று மேலும் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகின்றது. அந்த வழக்கிலும்
அரசு மற்றும் BSNL நிர்வாகத்திற்கு எதிராகவோ, விருப்ப ஓய்வுக்குப் பாதகமாகவோ எந்தவித
தீர்ப்பும் வழங்கப்படாது என்றே தோன்றுகிறது.
அதே நேரம் பணிக்கொடை மற்றும் COMMUTATION பட்டுவாடாவில் ஏதேனும் சாதகமான தீர்ப்பு சொல்ல
வாய்ப்புள்ளது.
வழக்குகள் பாதகம் செய்யுமா? பலன் தருமா?
என்பதைப் பொறுத்திருந்துதான்
பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment