Sunday 19 January 2020


செ ய் தி ள்

திறந்தது SAMPANN

DOTயின் SAMPANN ஓய்வூதிய மென்பொருள் உபயோகத்திற்கான அனுமதி விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. சம்பந்தப்பட்ட ஊழியர்களின் அலைபேசிக்கு 
குறுந்தகவல் மூலம் செய்தி அனுப்பப்படுகிறது.
USER ID : PAN NUMBER - வருமான வரிகணக்கு எண்
PASSWORD : Admin@123
மதுரை வணிகப்பகுதியில் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்ப புகைப்படம், மாதிரி கையெழுத்து, வங்கி சான்றிதழ் போன்றவற்றை நிர்வாகமே பதிவேற்றம் செய்கிறது. தோழர்கள் தங்களது விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளவும்.
-----------------------------------------------
வாடிக்கையாளர் சேவை மையங்கள்

நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை CSC வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. தனியாரிடம் விடப்படும் மற்றும் BSNL நிர்வாகத்தால் நடத்தப்படும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகங்கள்  25/01/2020க்குள் 
மாநில அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என
 மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
-----------------------------------------------
மாற்றப்படும் மைக்ரோவேவ் சொத்து

இராமேஸ்வரத்தில் STR கட்டுப்பாட்டில் உள்ள 0.26 ஹெக்டேர் நிலம் மற்றும் கட்டிடம் தற்போது AIR FORCE வசம் உபயோகத்திற்கு விடப்பட்டுள்ளது. மேற்கண்ட சொத்தை முழுமையாக AIR FORCEக்கு மாற்றிக்கொடுத்திட BSNL  நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------
வைப்புத்தொகை கூடுதல் வட்டி

விருப்ப ஓய்வு மற்றும் பணிநிறைவில் செல்லும் ஊழியர்களின் வைப்புநிதி ஏப்ரல் 2020ல் இருந்து DOTக்கு செலுத்தப்படாமல் இருந்தது. தற்போது BSNL தேங்கியிருந்த வைப்புத்தொகையை செலுத்தியுள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து தாமதமாக செலுத்தியமைக்காக அபராத வட்டியை DOTக்கு BSNL  நிர்வாகம் செலுத்த வேண்டும் என DOT கடிதம் எழுதியுள்ளது. ஆனாலும் பணிமுடிப்போரின்  வைப்புநிதி உரிய வட்டியுடன் 
முழுமையாகப் பட்டுவாடா செய்யப்படும்.
-----------------------------------------------
வங்கிக்கடன் மற்றும் சொசைட்டிக் கடன்

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்கள் தங்களது வங்கிக்கடன் மற்றும் கூட்டுறவு சங்கக்கடன் ஆகியவற்றை செலுத்தியமைக்கான NOC சான்றிதழை 07/02/2020க்குள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. எஞ்சியுள்ள வங்கிக்கடன் மற்றும் கூட்டுறவு சொசைட்டிக்கடன் ஊழியர்களது விடுப்புச்சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். விடுப்புச்சம்பளத்தை விட கூடுதலாக கடன் இருந்தால் மிச்சமுள்ள தொகை அருட்கொடை EXGRATIA வில் பிடித்தம் செய்யப்படும். இதற்காக விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்கள் நிர்வாகத்திற்கு சம்மதக்கடிதம் அளிக்க வேண்டும். விடுப்புச்சம்பளம் மற்றும் அருட்கொடையைத் தாண்டிக்கடன் இருந்தால் மிச்சமுள்ள கடனை ஊழியர்கள் தங்கள் சொந்தப் பொறுப்பில் செலுத்த வேண்டும். 
NOC அளிக்கப்படா விட்டால் ஓய்வு பெறும் ஊழியர்களின் விடுப்புச்சம்பளம் மற்றும் EXGRATIA  நிறுத்தி வைக்கப்படும்.

 வங்கிக்கடன்கள் தொடர்ந்து தாமதமாக செலுத்தப்பட்டதால் அபராத வட்டி செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகங்கள் கடன்பட்ட ஊழியர்களை நிர்ப்பந்தம் செய்து வருகின்றன. எனவே அபராத வட்டியைத் தள்ளுபடி செய்து வங்கிகள் கடன்முடிப்புச் சான்றிதழ் வழங்குமா என்பது கேள்விக்குறி. ஊழியர்களின் சம்பளத்தில் மாதாமாதம் பிடித்தம் செய்த நிர்வாகமே அபராத வட்டிக்கு முழுப்பொறுப்பு. தற்போது தொழிற்சங்கக்குரல் எடுபடாமல் போவதால்  பாதிக்கப்பட்ட தோழர்கள் ஒன்று சேர்ந்து வழக்குத் தொடுக்கலாம்.
-----------------------------------------------
NFTE மாநிலச்செயலர்கள் கூட்டம்

NFTE மாநிலச்செயலர்கள் கூட்டம் பிப்ரவரி 18 மற்றும் 19 தேதிகளில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நடைபெறுகின்றது.

2 comments:

  1. தற்போது தொழிற்சங்க குரல் எடுபடாமல் போவதால்......என்று குறிப்பிடுவது வீரம் செறிந்த. பாரம்பரியம் மிக்க தொழிலாளி வர்க்கத்தை கேவலப்படுத்தும் போக்கு!!!...சேலம் எஸ் ஆறுமுகம்

    ReplyDelete