Sunday 5 January 2020


உத்தமர் புகழ் ஓங்குக...
ஜனவரி - 6
ஓய்வூதியம் காத்த உத்தமர்
தோழர். ஓம் பிரகாஷ் குப்தா
நினைவு தினம்
 ------------------------
போனஸ் எங்களுக்கு பகல் கனவானது...
LTC எங்களை விட்டு எங்கோ சென்றது...
மருத்துவப்படி மரித்தே போனது...
சம்பளம் எங்களுக்கு சஞ்சலம் தந்தது...
எல்லாம் இழந்த எங்களை...
விருப்ப ஓய்வு சுனாமி...
விரட்டி விரட்டித் தாக்கியபோது...
அலையாத்திக் காடுகளாய்....
அரவணைத்துக் காத்தது...
நீ தந்த ஓய்வூதியம்....
எங்களின் உயிர் ஊதியம்...

உயர் ஊதியம் தந்தவனே...
உயிர் ஊதியம் காத்தவனே...
வணங்குகிறோம்...
நீ இல்லாத நிலை கண்டு
நித்தமும் வருந்துகிறோம்...

No comments:

Post a Comment