VRS – ஓய்வூதிய
விண்ணப்பங்கள்
விருப்ப ஓய்வில்
செல்லும் தோழர்கள் தங்களது ஓய்வூதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வழிமுறை பற்றி
CORPORATE அலுவலகம் 03/01/2020 அன்று வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
ஓய்வு பெறும் தோழர்களின்
சேவைக்குறிப்பேடு SERVICE BOOK சோதனை முழுமையாக முடிந்த பின்பு அவர்களுக்கு
SAMPANN எனப்படும் DOT இணையத்தில் USER ID எனப்படும் பயனர் அடையாளம் மற்றும்
PASSWORD எனப்படும் கடவுமொழி அந்தந்த மாவட்ட மட்டத்தில் உள்ள அதிகாரியால் வழங்கப்படும்.
USER ID ஓய்வு
பெறப்போகும் தோழர்களின்
PAN வருமானவரி எண்ணாகும்.
கடவுமொழி PASSWORD
அவரவர்
அலைபேசிக்கு அனுப்பப்படும்.
SAMPANN மென்பொருளில்
உள்ள
FORM–5, FORM-3, FORM-1 மற்றும் FORM-A ஆகிய
விண்ணப்பங்களை ONLINE மூலம் நிரப்ப
வேண்டும்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பு சம்பந்தப்பட்ட
விண்ணங்களின் அச்சுப்பிரதி எடுக்கப்பட்டு கையொப்பம் இடப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
சமர்ப்பிக்க வேண்டும்.
SAMPANN மூலம்
SCANN செய்து பதிவேற்றம் செய்ய வேண்டியவை :
- கணவன் மனைவி இணைந்த புகைப்படம்
- ஓய்வு பெறும் ஊழியரின் தனித்த புகைப்படம்
- கணவன் அல்லது மனைவியின் தனித்த புகைப்படம்
- குடும்ப உறுப்பினர்களின் தனித்த புகைப்படம்
- ஊழியரின் மாதிரி கையெழுத்து – SPECIMEN SIGNATURE
- வங்கியில் பெறப்பட்ட BANK MANDATE FORM.
புகைப்படங்கள்
70 KB அளவிற்குள் இருக்க வேண்டும்.
பதிவேற்றம்
முடிந்த பின்பு சமர்ப்பிக்க வேண்டியவை:
- கணவன் மனைவி இணைந்த புகைப்படம் – 3
- ஓய்வு பெறும் ஊழியரின் தனித்த புகைப்படம் – ஒன்று
- கணவன் அல்லது மனைவியின் தனித்த புகைப்படம் – ஒன்று
- குடும்ப உறுப்பினர்களின் தனித்த புகைப்படம் – ஒன்று
- அங்க அடையாளம் சான்றளிக்கப்பட்டது
- கணவன் மற்றும் மனைவியின் PAN அட்டையின் நகல்
- கணவன் மற்றும் மனைவியின் ஆதார் அட்டையின் நகல்
- இரத்து செய்யப்பட்ட வங்கி காசோலை
- வங்கியில் பெறப்பட்ட BANK MANDATE FORM.
- SAMPANNல் பதிவேற்றம் செய்யப்பட்ட FORM–5, FORM-3, FORM-1 மற்றும் FORM-A ஆகிய விண்ணப்பங்களின் கையொப்பமிடப்பட்ட அச்சுப்பிரதி.
ஓய்வு பெறப்போகும் ஊழியர்கள் மேற்கண்ட ஆவணங்களை
20/01/2020 முதல்
31/01/2020க்குள்
தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
தலமட்ட நிர்வாகங்கள் பிப்ரவரி முதல் வாரத்திற்குள்
அனைத்து விண்ணப்பங்களையும்
DOTCELLன்
CCA அலுவலகங்களுக்கு அனுப்பிட வேண்டும்.
ஓய்வு பெறப்போகும்
தோழர்கள் மேலே குறிப்பிட்ட ஆவணங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். ஆங்காங்கே நமது
தோழர்கள் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்திட உதவி புரிவார்கள்.
No comments:
Post a Comment