Wednesday 1 January 2020


செ ய் தி க ள்

NFTE தமிழ் மாநிலச் செயற்குழு
03/01/2020 – வெள்ளிகாலை 10 மணி
NFTE சங்க அலுவலகம் – CGM அலுவலகம்சென்னை
 ------------------------------------------------------------------
தமிழக CGM பொறுப்பு
தமிழக CGM பொறுப்பில் இருந்து திரு.V.இராஜு அவர்கள் 
பதவி உயர்வில் 31/12/2019 அன்று விடுவிக்கப்பட்டதையொட்டி 
திரு. V.ஜெகதீசன் PGM(NWP-CM) அவர்கள் மறு உத்திரவு வரும் வரை CGMஆகக்கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று உத்திரவிடப்பட்டுள்ளது .
 ------------------------------------------------------------------
IDA உயர்வு
01/01/2020 முதல் IDA 5.3 புள்ளிகள் உயர்ந்துள்ளது
இத்துடன் மொத்தப்புள்ளிகள் 157.3 சதமாகும்
இம்மாதம் விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்களின் விடுப்புச்சம்பளம் மற்றும் பணிக்கொடை சற்று கூடுதலாக கிடைக்கும் என்பது ஆறுதல்.
 ------------------------------------------------------------------
சேவைக்குறிப்பேட்டில் பிழைகள்
விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களின் சேவைக்குறிப்பேடுகள் DOTCELL  ஊழியர்களால் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. சேவைக்குறிப்பேடுகளில் பல்வேறு பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவற்றை சரிசெய்யுமாறும் BSNL நிர்வாகத்திற்கு CCA அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது. தற்போதுள்ள சூழலில் விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களின் ஓய்வூதியம் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில்தான் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்கள் கையில் கிடைக்கும் விடுப்புச்சம்பளம் மற்றும் அருட்கொடையை ஓய்வூதியம் கிட்டும் வரை சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment